திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு காட்டூர் 39வது வார்டு பகுதியில் இரண்டு வருடங்களுக்கு முன்பு புதிய குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தும் தண்ணீர் விநியோகம் செய்யாதததை கண்டித்தும், நான்கு இன்ஜ் அளவிற்கு சிமெண்ட் சாலை அமைப்பதற்கு பதிலாக இரண்டு இன்ச் உயரத்தில் மட்டும் சாலை அமைத்ததை கண்டித்தும்,
பாதாள சாக்கடை பணிகளை விரைந்து முடிக்க கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பானை உடைக்கும் போராட்டம் நடத்துவதாக ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி இன்று வடக்கு காட்டூர் காந்தி நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையின் மாநகராட்சிக்கும் பொது மக்களுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தி சமூக தேர்வுக்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பானைகளை உடைக்க கூடாது எனவும் ஆர்ப்பாட்டம் மட்டுமே நடத்திக் கொள்ளுமாறு போலீசார் அறிவுறுத்தினார்.
அதன் பேரில் போராட்டக்காரர்கள் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒருவர் ஆர்ப்பாட்டத்தை நிறைவில் பானையை உடைத்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தார். இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
இது குறித்து கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவர் கூறுகையில், குடிநீர் குழாய் இணைப்பு கொடுத்தும் இரண்டு வருடங்களாக குடிநீர் விநியோகம் வழங்கப்படவில்லை, அதற்கு மாநகராட்சி நிர்வாகத்தினர் கமிஷன் கேட்கிறார்கள், மேலும் அமைச்சர் தொகுதியில் இருந்து கொண்டு அனைத்திற்கு கமிஷன் கேட்கும் திருச்சி மாநகராட்சியாக உள்ளது.
மேலும் சிமெண்ட் சாலை அமைக்கக்கூடிய இடங்களில் நான்கு இன்ச் அளவிற்கு அமைக்காமல் வெறும் 2 இன்ச் அளவில் மட்டுமே அமைத்து கமிஷன் பார்க்கிறார்கள் என மாநகராட்சி குற்றம் சாட்டினார். இதனிடையே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஒருவர் பானையை உடைத்ததால் போலீசார் உடனடியாக அவர்களை கைது செய்ய முற்பட்டனர்.
இந்த நிலையில் மாநகராட்சியை கண்டித்தும் ஊழல் செய்கின்ற மாநில அரசை கண்டித்தும் போலீசாரை கண்டித்தும் கோசம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டவர் கைதாகினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments