திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள முத்தரையர் மக்களின் புனித தளமான பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டபத்தின் அருகிலேயே புனித தன்மையை கெடுக்கும் விதமாக செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை அகற்றக் கோரியும்,
மேலும் தமிழக அரசு அறிவித்தபடி பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டப வளாகத்தில் நூலகத்தினை விரைந்து திறந்திடக் கோரி தமிழர் தேசம் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் அருகே நடைபெற்றது. இதில் மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ் தலைமையில் ஜங்ஷன் பகுதி செயலாளர் தனபால் வரவேற்புரை ஆற்றினார்.
மாவட்ட செயலாளர் வள்ளல் மணி, மாவட்ட இணை செயலாளர் கோபி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக மாநில செயலாளர் அலகரை பரமசிவம், மாவட்ட செயலாளர் மண்ணை சதீஸ்வரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக் கோரியும் நூலகத்தை விரைந்து திறந்திடக்கோரி கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
அதனைத் தொடர்ந்து மாநில பொதுச் செயலாளர் தளவாய் ராஜேஷ் கூறுகையில்….. பேரரசர் பெரும்பிடுகு முத்தரையரின் மணிமண்டப வளாகத்தில் தமிழக அரசு அறிவித்தபடி நூலகத்தினை விரைந்து திறந்திட கோரியும், அதேபோல் மணிமண்டபத்தின் அருகில் புனிதத்தை கெடுக்கும் வகையில் 24 மணி நேரம் செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபான கடையை உடனடியாக அகற்றிடக்கோரி
மாவட்ட ஆட்சித் தலைவர், அமைச்சர்கள் மற்றும் காவல்துறையிடம் பலமுறை முறையிட்டும் தற்போது வரை டாஸ்மாக் மதுபான கடை அகற்றப்படவில்லை. இதே நிலை தொடர்ந்தால் வருகிற ஜனவரி 10ஆம் தேதிக்கு மேல் தமிழர் தேசம் கட்சி சார்பில் டாஸ்மாக் மதுபான கடையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக தெரிவித்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments