மணப்பாறையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) CPI(ML) கட்சியின் சார்பாக தந்தை பெரியார் சிலை அருகே டாக்டர் அம்பேத்காரின் 132 வது பிறந்தநாளில் அம்பேத்காரின் கொள்கையை உயர்த்தி பிடித்து உறுதிமொழி எடுக்கபட்டு,
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பாதுகாப்போம், இந்திய தேசத்தை பாதுகாப்போம், காவி பாசிச ஆட்சிக்கு எதிராக, RSS, BJP ஒன்றிய அரசாங்கமானது, மக்களுக்கு எதிராக செயல்பட்டு மக்களிடையே கலவரத்தை உண்டு செய்து அம்பானியோடு கூட்டு வைத்து கொண்டு செயல்படும், ஒன்றிய அரசை கண்டித்தும்,
பெரியார், காரல்மார்க்ஸ், பற்றி தவறான கருத்துக்களை பரப்பி இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படும் தமிழக ஆளுநர் ரவி அவர்களை கண்டித்தும்,
மணப்பாறை அரசு கலை அறிவியல் கல்லூரியை தனிப்பட்ட அரசியல் காரணத்திற்காக பண்ணப்பட்டி கிராமத்தில் கல்லூரி கட்டிடம் கட்டுவதை கைவிட்டு மணப்பாறை நகர பகுதியில் அரசுக்கு சொந்தமான இடங்களில் கல்லூரி அமைவதை உறுதிபடுத்திட கோரியும்.மணப்பாறை தந்தை பெரியார் சிலை எதிரே நகர செயலாளர்பாலு தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்பாட்டத்தில் நகரகுழு உறுப்பினர் மெக்கானிக் இளையராஜா முன்னிலை வகிக்க ஆர்பாட்டத்தில் CPI(ML) கட்சியின் மாநிலகுழு உறுப்பினர் வழக்கறிஞர் ராஜ்குமார்ஒன்றிய செயலாளர் தங்கராஜ்,மாவட்டகுழு உறுப்பினர்கள் இளையராஜா, கருப்பையா,மாசிலாமணி, ஆகியோர் கண்டன உரையாற்றினர், மாவட்டகுழு உறுப்பினர் அந்தோனியம்மாள்,நகரகுழு உறுப்பினர்கள் கோகுல், நித்திஷ், பாஸ்கர்,அலாவுதீன், மற்றும் ஒன்றியகுழு உறுப்பினர்கள் பெருமாள். ராணி, ஈஸ்வரி, குமரேசன், சிண்னதுரை, கனகராஜ்,கோசி,மணி ஆகியோர் பங்கேற்றனர்

# திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
13 Jun, 2025
388
15 April, 2023










Comments