நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் திருச்சி தலைமை தபால் நிலைய முன்பாக சுமார் பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் மத்திய அரசை கண்டித்தும் நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும் அங்கு இருக்கும் தடுப்புகளை தட்டி விட்டு தபால் நிலையம் உள்ளே நிழைந்து முற்றுகையிட முயற்சி செய்தனர். மேலும் பத்துக்கும் அதிகமான மாணவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இந்நிலையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல்துறையினர் குண்டு கட்டாக கைது செய்தனர்.
மிக முக்கியமான சாலை என்பதால் மாணவர்களின் போராட்டம் காரணமாக அப்பகுதியில் சுமார் 15 நிமிடம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/K6yszbySvxu9S3fSVAMEnM
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments