ஒசூர் வழக்கறிஞர் கண்ணன் சீருடையில் நீதிமன்றம் அருகில் கொலை செய்யும் நோக்குடன் கொடுரமாக வெட்டி தாக்கப்பட்டதை கண்டித்தும், தமிழகத்தில் தொடந்து வழக்கறிஞர்கள் கொலை செய்யபடுவதையும் தாக்கப்படுவதையும் கண்டித்தும், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை இயற்றி கோரியும் இன்று திருச்சி நீதிமன்றம் நுழைவாயில் முன்பு குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 200க்கும் மேற்பட்ட வழக்கறிஞர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V.வெங்கட் முன்னிலை வைத்தார் . தலைவர் முல்லை சுரேஷ் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் பிரபு சசிகுமார் பொருளாளர் கிஷோர் குமார் செயற்குழு உறுப்பினர்கள் பாலமுருகன், எழிலரசி, கஸ்தூரி, சித்ரா, அருண், பிரியா, முத்துகிருஷ்ணன், மில்லர் ராஜ், கதிர்,
திருச்சிராப்பள்ளி வழக்கறிஞர் சங்க துணை தலைவர் மதியழகன் இணைச் செயலாளர் சந்தோஷ் குமார் jaac செயலாளர் பன்னீர்செல்வம் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை குற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் P. V. வெங்கட் செய்திருந்தார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments