திருச்சி அருகே ரயில்வே கேட்டை மூட எதிா்ப்புத் தெரிவித்து சமூக ஆர்வலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். திருச்சி மாவட்டம், பேட்டைவாய்த்தலை பகுதியில் மில் கேட் எனப்படும் ரயில்வே தண்டவாளத்தை கடக்கும் ரயில்வே கேட்டுடன் கூடிய பாதை உள்ளது.
Advertisement
இதனை அங்கிருந்த சர்க்கரை ஆலை நிர்வாகமானது ரயில்வேக்கு வரி செலுத்தி பராமரித்து வந்தனர். இவ்வழியே பொதுமக்களும் பேருந்துகளும் சுமார் 50 ஆண்டு காலமாக அனுமதிக்கப்பட்டு வந்தார்கள். தற்போது சர்க்கரை ஆலையானது செயல்படாத காரணத்தினால் இந்த ரயில்வே கேட் பராமரிப்பு பணியில் இருந்து தாங்கள் விலகிக் கொள்வதாகவும் ரயில்வே நிர்வாகத்தினரிடம் தெரிவித்துள்ளனர். இதனால் நிர்வாக காரணங்களுக்காக இனி இந்த ரயில்வேகேட் பாதையானது நிரந்தரமாக மூடப்படும் என்று அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது.
இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற பொதுமக்கள் உடனடியாக இந்த பாதையை நிரந்தரமாக திறப்பதற்கான வழியை ரயில்வே நிர்வாகமும் அரசு அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தங்களது நிலைப்பாட்டை தெரிவித்தனர்.
இவ்வழியே 20க்கும் மேற்பட்ட கிராம பொதுமக்களும், தனியார் பேருந்துகளும் அரசு பேருந்துகளும், தனியார் வாகனங்களும், ஆம்புலன்ஸ், பொதுமக்கள், பயணிகள், மாணவர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அனைவரும் பயணம் செய்து வருகின்றனர்.
எனவே இந்த கேட்டை மூட நிரந்தரமாக மூட கூடாது என்பதை வலியுறுத்தி அருகிலுள்ள பேட்டவாய்த்தலை ரயில் நிலைய மேலாளரிடம் தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் பொருட்டு கையெழுத்து மக்களிடம் பெற்று கடிதத்தை 150க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சமர்ப்பித்தனர்.
Advertisement
இந்நிகழ்வு சிறுகமணி பேரூராட்சி முன்னாள் தலைவர் கே.ஆர். ஆர் ராஜலிங்கம், காவிரி மீட்பு குழு சமூக ஆர்வலர்கள் சுற்று வட்டார கிராம பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து 10 நாட்கள் நிரந்தரமாக கேட்டை மூடும் முடிவை அதிகாரிகள் தள்ளி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
Comments