திருச்சி மாவட்டம் குணசீலத்தில் அமைந்துள்ளது பிரஸன்ன வேங்கடாஜலபதி திருக்கோயில். இங்கு எழுந்தருளியிருக்கும் பெருமாள் சங்கு சக்கரதாரியாய் திருமார்பில் இலக்குமி துலங்க கையினில் செங்கோல் ஏந்தி நின்ற திருக்கோலத்தில் சேவை சாதிக்கின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்டோர் 48 நாட்கள் விரத முறைப்படி வணங்கினால் வினைகள் யாவையையும் கடவுள் கருணையினாலே போக்கி அருள் புரிகின்றனர். தென் திருப்பதி என்று இத்தலம் அழைக்கப்படுகிறது.
இத்திருக்கோயிலில் ப்ரும் மோத்ஸவ விழாவானது செப்.17ம் வாஸ்து சாந்தி பூஜையும் தொடர்ந்து நேற்று (செப் 18ம்) கொடியேற்றம் கொடிமரத்தில் கருட கொடியானது ஏற்றப்பட்டது. மேலும் நேற்று முதல் ஒவ்வொரு நாளும் அன்னவாஹனம் சிம்ம வாஹனம், அனுமந்தவாகனம் செப் 21ம் தேதி கருட வாகனமும் வீதியுலா நடைபெறும்.
விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வருகிற 26ம் தேதி நடைபெற உள்ளது. கொடியேற்ற நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/D0TGphikme7AsbscoQstiY
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
https://www.threads.net/@trichy_vision
Comments