திருச்சி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட திருச்சி – கரூர் சாலை, திருச்சி – திண்டுக்கல் சாலை, திருச்சி – மதுரை சாலை, திருச்சி – சென்னை சாலை, திருச்சி – தஞ்சை சாலை, திருச்சி – புதுக்கோட்டை சாலை, மேற்கண்ட தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை ஓரங்களில் இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் நிறுத்துவதை கண்காணித்து முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் நிறுத்தவும் சம்பந்தபட்ட வாகன ஓட்டுநர்களுக்கு நெடுஞ்சாலை ரோந்து வாகன காவலர்கள் மூலம் அறிவுறுத்த வேண்டுகிறோம்.
குறிப்பாக கரூர் சாலையில் காவல்காரபாளையம் பெட்ரோல் பங்க், ஜீயபுரம் பேருந்து நிறுத்தம் முதல் திருசெந்துரை அரசு பள்ளி வரை பழூர் மற்றும் மான்சிங்பங்களா கம்பரசம்பேட்டை, திருச்சி – திண்டுக்கல் சாலையில் கருமண்டபம், தீரன்நகர், பிராட்டியூர், கள்ளிக்குடி வார சந்தை பகுதி, ITC கூடோன், வண்ணாங்கோவில், JJ கல்லூரி, வெள்ளிவாடி போன்ற பகுதிகளில் கனரக வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களில் நிறுத்தப்படுகின்றன.
மேற்கண்ட பகுதிகளில் கனரக வாகனங்கள் சாலை போக்குவரத்து விதிமுறைகளை கடைபிடிக்காமல் நிறுத்துவதும் தொடர்ந்து வருகிறது. எனவே திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தக்க நடவடிக்கை எடுத்து திருச்சி மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட மாநில தேசிய நெடுஞ்சாலைகளில் சாலை பயனீட்டாளர்களின் சாலை பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Comments