திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டம், அணியாப்பூர் கிராமம், வீரமலை பாளையத்தில் உள்ள துப்பாக்கி சுடும் இடத்தில் 24.06.2021 முதல் 25.06.2021 வரை உள்ள தினங்களில், காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை 12 MADRAS UNIT படையினரால் வெடிக்காத வெடி பொருட்களை அகற்றும் பணி நடைபெற உள்ளது.
அதுசமயம் மேற்கண்ட பயிற்சி தளத்தில் மேய்ச்சலுக்காக கால்நடைகள் மற்றும் மனித நடமாட்டம் எதுவும் இருக்கக் கூடாது எனவும், மேலே குறிப்பிட்டுள்ள பயிற்சி தளத்தில் எவரும் பிரவேசிக்கக் கூடாது எனவும், திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் சு.சிவராசு கேட்டுக் கொண்டுள்ளார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய:
https://chat.whatsapp.com/BghqgpbVivc35SvK8d6SOF
Comments