தமிழக அரசின் உத்தரவின்பேரில், பொதுமக்களின் குறைதீர்க்கும் வகையில் ஒவ்வொரு புதன்கிழமையும் திருச்சி மாநகரத்தின் காவல் ஆணையர் ந.காமினி, பொதுமக்களிடமிருந்து நேரடியாக மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்து வருகிறார்.
அதன்படி, இன்று (03.07.2024)-ந்தேதி திருச்சி மாநகரம், கே.கே.நகர் ஆயுதப்படை சமுதாய கூடத்தில், பொதுமக்கள் சிறப்பு குறைதீர்ப்பு முகாம் மாநகர காவல் ஆணையர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. பொதுமக்கள் இச்சிறப்பு முகாமிற்கு நேரில் வந்து கொடுத்த 53 மனுக்களை பெற்று, மனுக்கள் மீது உரிய தீர்வு காண சம்மந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகளுக்கு அனுப்பி, தக்க அறிவுரை வழங்கப்பட்டது.
மேலும் தமிழக முதல்வர் அவர்களால் தொடங்கப்பட்ட “மக்களுடன் முதல்வர்” முகாம், முதலமைச்சரின் தனிப்பிரிவு, காவல்துறை தலைமை இயக்குநரிடம் நேரடியாகவும், தபால், ஆன்லைன் மூலமாகவும் பொதுமக்கள் அளித்த 1001 மனுக்கள் பெறப்பட்டு, 880 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டு, மீதம் உள்ள 120 மனுக்கள் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களின் மூலம் விசாரணை நடத்தி விரைவில் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும் இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் திருச்சி மாநகர காவல் ஆணையர் சிறப்பு குறைதீர்ப்பு முகாமில் அளித்த 814 மனுக்களில் 478 மனுக்கள் மீது துரிதமாக தீர்வு காணப்பட்டும், மீதம் உள்ள மனுக்கள் மீது முறையான விசாரணை நடைபெற்று வருகிறது.
இம்முகாமில், காவல் துணை ஆணையர் வடக்கு மற்றும் தெற்கு, அனைத்து காவல் சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் கலந்து கொண்டார்கள்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments