மக்கள் சமூக பாதுகாப்பு சங்கம் சார்பில் சாலை வசதி வேண்டி தமிழக முதலமைச்சர் தனிப்பிரிவு, கல்வித்துறை அமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர், பஞ்சாயத்து தலைவர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனுவில், திருச்சி திருவெறும்பூர் கீழக்குறிச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மகாசக்தி நகர் குடியிருப்பில் நூற்றுக்கணக்கான மக்கள் வசித்து வருகிறார்கள்.
இப்பகுதி மக்கள் கடந்த 18 வருடமாக சாலை வசதி இல்லமால் மிகவும் சிரமத்துடன் மழை காலங்களில் வசித்து வருகிறார்கள். இது சம்மந்தமாக இப்பகுதி மக்கள் பலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்ததும் சாலை வசதி இதுநாள் வரை செய்து தரவில்லை. ஆகவே இது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்து சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments