திருச்சி மாவட்டம் துறையூர் நகராட்சி பகுதியில் உள்ள 3, 4 வார்டில் உள்ள பத்து வயது சிறுவர்கள் நேற்று மதியம் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த பொழுது பிரசன்னா மற்றும் யோகம் என்ற 2 சிறுவர்களை வெறி நாய் கடித்து குதரியது. இவர்கள் அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்த பொது மக்களையும் வெறிநாய் கடித்தது.
இதனால் நாய் கடித்ததில் காயம் அடைந்த சிறுவர்கள் இருவர் மற்றும் பொதுமக்கள் ஐந்து பேர் என ஏழு பேரும் துறையூர் அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இச்சம்பவம் அறிந்து அப்பகுதி திமுகவை சார்ந்த வார்டு கவுன்சிலர்கள் கார்த்திக், பிரபு சுதாகர் பொது மக்களுடன் இணைந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஏற்கனவே பலமுறை நகர்மன்ற கூட்டத்தில் நாய்களை கட்டுப்படுத்த கோரிக்கை விடுத்ததாகவும், இதுவரை நகராட்சி நிர்வாகம் அதனை செயல்படுத்தாததால் தற்போது சிறுவர்களை நாய் கடித்து விட்டதாக தெரிவித்தனர். நகர் மன்ற உறுப்பினர்கள் சாலை மறியலில் ஈடுபடத்தை அறிந்த துறையூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்ற உறுதியளித்தது தொடர்ந்து நகர் மன்ற உறுப்பினர்கள் சாலை மறியலை கைவிட்டனர். திமுக கவுன்சிலர்களே சாலை மறியலில் ஈடுபட்டது துறையூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments