சமுதாயக்கூடம் கட்டித் தரவுள்ள இடத்தை தனிநபர் ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு – திமுக கவுன்சிலர் உள்ளிட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருச்சி கருமண்டபம் காமராஜபுரம் பகுதியில் திருச்சி மாநகராட்சிக்கு சொந்தமான அரசு புறம்போக்கு இடம் உள்ளது இந்த இடத்தில் அப்பகுதி மக்கள் சமுதாயக்கூடம் கட்டித் தர வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை எழுப்பி வருகின்றனர் பின்நிலையில் கிராம சபை கூட்டத்தில் அந்த இடத்தில் சமுதாய
கூடம் கட்டித் தரப்படும் என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது ஆனால் அந்த இடத்தை தனி நபர் ஒருவர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் இதன் காரணமாக அந்த இடத்தில் சமுதாய கூடம் கட்ட இயலவில்லை என அதிகாரிகள் காலம் தாழ்த்தி வருகின்றனர் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி காமராஜபுரம் பகுதி பொதுமக்கள் திருச்சி திண்டுக்கல் நெடுஞ்சாலையில் கருமண்டபம் அருகே திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி கன்ட்ரோல்மென்ட் காவல் நிலைய உதவி ஆய்வாளர் ஜாஸ்மின் பானு மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர். இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இந்த போராட்டம்
காரணமாக திருச்சி திண்டுக்கல் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் அப்பகுதி திமுக கவுன்சிலர் ராமதாஸ் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments