Thursday, August 14, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

தமிழகத்தில் கூலிப்படையால் நடைபெறும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் – கார்த்திக் சிதம்பரம் எம்பி வேதனை

தமிழகத்தில் கூலிப்படையால் நடைபெறும் கொலை சம்பவங்களால் பொதுமக்கள் அச்சம் – கார்த்திக் சிதம்பரம் எம்பி வேதனை 

திருச்சி விமானநிலையத்தில் காரைக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார் அப்போது அவர் கூறுகையில்…

தொகுதி மறுவரையறையில் தமிழக முதல்வரின் நிலைப்பாட்டை முழுமையாக வரவேற்கிறேன், மக்கள் தொகை அடிப்படையில் மறுசீரமைப்பு நடந்தால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் குறையும், 888 ஆக உயர்த்தினால் தமிழகத்தின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கும், ஆனால் வடமாநிலத்தின் பிரதிநிதித்துவம் கூடும். தென்னக மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும், 25 ஆண்டுகளின் இதே நிலை தொடர வேண்டும் என்ற முதல்வரின் கருத்து வரவேற்பு தெரிவிப்பதாக கூறினார்.

543 பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள நிலையிலேயே எங்களுக்கு பேச வாய்ப்பு கிடைக்காதநிலையில் இப்போது நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கை அதிகரித்தால், விவாதம் செய்ய முடியாது இது கூடிகளையும் ஒரு கூட்டமாகவே அமையும், பெரிய பாராளுமன்றம் அமைந்திருப்பதால் எண்ணிக்கை கூட்டினாலும், விவாதம் செய்ய இயலாது.

தொகுதி மறுவரையறை என்பது இந்தி பேசாத மாநிலங்களை பெரிதும் பாதிக்கக்கூடியது, இந்தியாவில் அரசியல் நிலைத்தன்மையை மாற்றக்கூடிய நிலை என்பதால் மற்ற மாநில முதல்வர்களை அழைத்து கூட்டம்நடத்தியுள்ளனர் என்றார்.தமிழகத்தில் பாஜகவுடன் எந்த ஒரு அரசியல் கட்சியினரும் கூட்டணி வைத்துக் கொள்ளாது, பாஜகவின் இந்தி மற்றும் இந்துத்துவா கொள்கையை தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், இரண்டு மொழியை முழுமையாக படித்தபின்னர் மூன்றாவது மொழியைபற்றி பேசலாம் தமிழகமக்கள் மூன்றாவது முறையை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். எந்த வடமாநிலங்களில் மூன்று மொழியில் பேசுகிறார்கள் என மத்திய அரசு வெள்ளை அறிக்கை வெளியிடட்டும், வட மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்கள் ஆறு மாதத்திலோ ஒரு வருடத்திலோ பேசும் வகையில் தமிழை கற்றுக் கொள்கிறார்கள் அதுபோல வட மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து வேலைக்கு செல்வோர் ஹிந்தி பேசுபவர்களுடன் பழக வேண்டியது நிலை ஏற்பட்டால் அவர்களும் பேசிப்பழகி கற்றுக்கொள்வார்கள், இது மொழி திணிப்பு மட்டுமல்ல ஒரு கலாச்சார திணிப்பும்தான், எந்த காலத்திலும் தமிழகம் இந்தி திணிப்பை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்றார்.

இந்திய விமான நிறுவனம் விமான நிலையங்களை சிறப்பாக நடத்துவதில்லை, இந்தியாவிலேயே மோசமான விமான நிலையம் சென்னை விமான நிலையம் தான், தனியார் மயமாக்கினால் இன்னும் ப்ரொபஷனலாக நடத்துவார்கள், எனவே சென்னை விமான நிலையத்தையும் தனியார் மயமாக்கவேண்டும் என்றார்.காரைக்குடியில் கூலிப்படையை கொண்டு ஒரு திட்டமிட்ட கொலை நடைபெற்றுள்ளது, அதேபோன்று நெல்லையில் முன்னாள் காவல் அதிகாரி கொலை செய்யப்பட்டுள்ளார், இது போன்ற செயல்கள் தமிழக மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் நடைபெற்றுவரும் கூலிப்படை கொலைகள் தடுக்கப்பட வேண்டும், அரசு மற்றும் நுண்ணறிவு பிரிவினர், மற்றும் சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதுபோன்ற கொலைசம்பவங்களால் தமிழக மக்கள் அச்சமான நிலையிலேயே உள்ளனர்.குறைந்தபட்ச ஆதார விலை வழங்க வேண்டும் என்பதுதான் விவசாயிகளின் கோரிக்கை மத்திய அரசு அதனை பேச்சுவார்த்தை நடத்தி நிறைவேற்ற வேண்டும், மாறாக விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தக் கூடாது என்றார்.

தேர்தலுக்கு முன்பு அமலாக்கத்துறை அந்தந்த மாநிலங்களில் சிறப்பாக செயல்படுவார்கள், அரசாங்கம் என்ன அறிக்கைவிடுகிறார்கள் என்பதை பார்த்துதான் கூறமுடியும், தேர்தல் வரும்போது அமலாக்கத்துறை ஆக்டிவாக செயல்படும்.தேர்தல் நெருங்கும் சமயத்தில் காட்சிகள் மாறும் எல்லாம் மாறும், அதேநேரம் இந்தியா கூட்டணி தமிழகத்தில் வலுவாக இருக்கிறது, இந்தியா அளவில் காங்கிரஸ் கட்சி தலைமை தாங்கும், தமிழகத்தில் திமுக தலைமை தாங்கும், சில கட்சிகளுக்கு சில கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்யும், வேறு அணி அமைகிறதா என்பது கடைசி நேரத்தில் தெரியும்.

அரசாங்கம் செய்ய வேண்டிய கடமையை செய்ய வேண்டும், கல்வி, சுகாதாரம், காவல் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்பதுதான் என்னுடைய பொருளாதார தத்துவம் என்றார்

பேட்டி : திரு.கார்த்தி சிதம்பரம் எம்பி

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *