Site Logo mobile
Search Icon
Mobile Gif
News

இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் உடல் நல்லடக்கம் – பொதுமக்கள் அஞ்சலி!!

இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று சென்னையில் உயிரிழந்தார். அவருடைய உடல் இன்று காலை 7 மணி அளவில் திருச்சி வந்தடைந்தது. அங்கு வீரவணக்கம் முழங்க அவரது உடலை வரவேற்றனர். திருச்சி சீராத்தோப்பில் உள்ள பாரதியார் குருகுலத்தில் ராமகோபாலன் உடல் பொதுமக்கள் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அதற்கான ஏற்பாடுகளை இந்து முன்னணி அமைப்பினர் மேற்கொண்டுள்ளனர். இன்று பிற்பகல் பாரதியார் குருகுல வளாகத்திலேயே அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. அந்த இடத்தில் ஜே.சி.பி எந்திரங்கள் கொண்டு தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்துவருகிறது. அப்பகுதி முழுவதும் திருச்சி சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, காவல் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் உள்ளிட்ட காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். ராம கோபாலன் கொரோனா காரணமாக உயிரிழந்துள்ளதால் அதிக அளவிலான மக்கள் கூட வேண்டாம் என காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் அருகில் வந்து அஞ்சலி செலுத்த வேண்டாம் என்பதால் ஆங்காங்கே நின்றபடி பக்தி முழக்கங்களை எழுப்பியபடி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கோவிட் தொற்று காரணமாக உயிரிழந்த நிலையில் அவருடைய உடலை பாதுகாப்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் உத்தரவுபடி கவச உடைகள் அணிந்து அடக்கம் செய்யும் நிகழ்வு துவங்கியது.

பின்பு ராமகோபாலனுக்கு இறுதி சடங்கில் பாஜகவின் ஹெச்.ராஜா மற்றும் பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர். ஆகம விதிப்படி தமிழிலும் வேத மந்திரங்கள் முழங்க உடல் அடக்கம் செய்யப்பட்டது. தனிமனித இடைவெளியுடன் பங்கேற்றனர் கோவிட் தொற்றால் இறந்த அவருடைய உடலுக்கு முழு பாதுகாப்புடன் சுகாதாரத்துறை உத்தரவுபடி உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி சடங்குகள் அனைத்தையும் அவரது உதவியாளர் பத்மநாபன் செய்தார்.

https://youtu.be/Jvx_Piv60ks
Advertisement

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *