திருச்சியில் கடந்த வாரம் இரண்டு நாட்கள் தொடர் மழை பெய்து அதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மழை நீர் தேங்கி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு வாரம் ஆகியும் திருச்சி காஜாமலை ஜே.கே.நகர் பகுதியில் மழை நீர் வடிவத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் திருச்சி கிழக்கு தொகுதி எம்எல்ஏ இனிகோ இருதயராஜ் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
அப்பொழுது பொதுமக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு தங்களது குறைகளை கூறினர். தொடர்ந்து அவர் அப்பகுதியில் ஆய்வு செய்து விரைவில் மழை நீர் அகற்றப்படும் என உறுதி அளித்தார். இதனை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments