திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 47ல் மாமன்ற உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட காலிப்பதவியிடத்திற்கு வாக்காளர் பட்டியல் வெளியீடு
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 47ல் மாமன்ற உறுப்பினர் பதவியில் ஏற்பட்ட காலிப்பதவியிடத்திற்கு நகர்புற உள்ளாட்சி தற்செயல்/இடைக்காலத் தேர்தல்கள் 2025 நடைபெற உள்ள நிலையில் அதற்கான வாக்காளர் பட்டியலை இன்று மாநகராட்சி மைய அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட

அனைத்துக் கட்சியினர் முன்னிலையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு. மெ.த.சாலைதவவளன் மற்றும், திரு. த.சசிகலா, உதவி ஆணையர்(பணிகள்) ஆகியோர் பொதுமக்கள் பார்வைக்கு இன்று (05.05.2025) வெளியிட்டார்கள். இதில் ஆண் வாக்காளர்கள் 5738, பெண் வாக்காளர்கள் 6133, மூன்றாம் பாலினத்தவர் 2 மொத்தம் 11873 வாக்காளர்கள் பட்டியிலில் அடங்கியுள்ளனர்.

பொதுமக்கள் பார்வைக்காக மாநகராட்சி மைய அலுவலகம், வார்டுக்குழு அலுவலகம் -2 மற்றும் வார்டுக்குழு அலுவலகம் -4ல் வைக்கப்பட்டுள்ளது வாக்காளர் பட்டியல் அந்த வார்டு பொதுமக்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என தெரிவித்தார்கள்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision

        
                                            
                            13 Jun, 2025                          
390                          
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
                                            
        
 05 May, 2025
            




			

          
                          
            
            
            
            
            
            
            
            
            
            
                          
                          
                          
                          
                          
                          
                          
Comments