தமிழ் மாநில காங்கிரஸ் விவசாய அணி தலைவர் புலியூர் நாகராஜன் கொரோனா தொற்று காரணமாக இன்று திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
தமிழகம் முழுவதும் விவசாயிகளுக்காக சென்று குரல் கொடுத்தவர். கடந்த 26ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திருச்சி வருகை தந்தபோது 12 விவசாயிகள் அடங்கிய குழுவுடன் கலந்து ஆலோசனை நடத்தினார். அதில் புலியூர் நாகராஜனும் ஒருவராவார். அன்று இரவு முதல் அவருக்கு உடல்நிலை சரி இல்லாமல் போனதை தொடர்ந்து திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் நேற்று அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் பரிசோதனைகள் மேற்கொண்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் விவசாயிகளுக்கு இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Comments