அந்தநல்லூர் ஒன்றியத்தில் புலியூர் குளம் புத்துயிர் பெறுகிறது: Rotary Club Tiruchirappalli Midtown பங்களிப்பு-29.04.2025 அன்று அந்தநல்லூர் ஒன்றியம், புலியூர் ஊராட்சியில் அமைந்துள்ள 36 ஏக்கர் பரப்பளவுள்ள பெரிய
குளத்தில், Rotary Club Tiruchirappalli Midtown சங்கத்தின் ஏற்பாட்டில் முக்கிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.முட்புதர்களை அகற்றியும், கரைகளை அகலப்படுத்தியும், குளத்தை சுற்றி மரக்கன்றுகள் நட்டும், சுற்றுச்சூழலுக்கு பயனுள்ள முறையில் குளம் மேம்படுத்தப்பட்டு, ஊராட்சிக்கு ஒப்படைக்கப்பட்டது.
இவ்விழாவை Rotary 3000 மாவட்ட ஆளுநர் திரு. ராஜா கோவிந்தசாமி அவர்கள் கல்வெட்டினை திறந்து வைத்து துவக்கி வைத்தார். நிகழ்வில் முன்னாள் ஆளுநர்கள் திரு. குணசேகரன், டாக்டர் ஜமீர்பாஷா, திரு. தில்லை மனோகரன், திரு. லெஷ்மிநாராயணன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள்.
மேலும், முன்னாள் புலியூர் மாவட்ட கவுன்சிலர் மற்றும் தலைவரும், Rotary Midtown சங்கத் தலைவரும் ஆகிய திரு. ராமதாஸ், செயலர் திரு. சீனிவாசன், பொருளாளர் திரு. ரவிச்சந்திரன், திட்டத் தலைவர் திரு. லோகேஷ்பாபு, திரு. திருநாவுக்கரசு, திரு.கஜேந்திரன், திரு.ரவிசந்திரன(Soft) மற்றும் பல சங்க உறுப்பினர்கள் விழாவில் கலந்துகொண்டனர்.
இந்த முயற்சி சுற்றியுள்ள கிராமங்களுக்குப் பெரும் நலன்களையும் நீர்வள பாதுகாப்பையும் வழங்கும் என்பதை அனைவரும் வலியுறுத்தினர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
Comments