தமிழக அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை விற்பதாக திருச்சி திருவெறும்பூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் திருவெறும்பூர் நவல்பட்டு சாலையில் உள்ள அம்மன் டீ ஸ்டால் என்ற கடையில் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஐந்து கிலோ ஹான்ஸ் மற்றும் குட்கா போதை பொருட்களை திருவெறும்பூர் போலீசார் கைப்பற்றி கடை உரிமையாளர் ரவிக்குமார் (42) என்பவரை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
ஏற்கனவே இதுபோல் தடை செய்யப்பட்ட போதைப் பொருட்களை விற்ற வழக்கில் இந்தக் கடை உரிமையாளர் ரவிக்குமாருக்கு (07.09.2021) அன்று திருச்சி ஆறாவது குற்றவியல் நீதிமன்ற (பொருப்பு) நீதிபதி குமார் அவர்கள் நூதன தண்டனையாக 20 நாட்கள் திருவெறும்பூர் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும்.
மேலும் காவல் நிலையத்தை 20 நாட்கள் சுத்தம் செய்வதோடு அங்குள்ள மரங்களுக்கு வரும் பறவைகளுக்கு உணவளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments