திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் கோட்டாத்தூர் ஊராட்சியைச் சேர்ந்த பூ. இரவிக்குமார். தற்போது தமிழ்நாடு தொல்லியல் நிறுவனத்தில் முதுநிலை கல்வெட்டியல் பட்டய மேற்படிப்பு பயின்று வருகிறார். தமிழ்நாடு அரசு ஒவ்வொரு ஆண்டும் நடைமுறையிலும் தூய தமிழில் பேசுவோரை ஊக்கப்படுத்த தூய தமிழ் பற்றாளர் என்ற விருதினை வழங்கி சிறப்புச் செய்கிறது.
அந்த வகையில் இந்த ஆண்டு மொத்தம் 13 நபர்களுக்கு தூய தமிழ்ப்பற்றாளர் விருது வழங்கப்படும் என்று அறிவிப்பாணை வெளியிட்டு இருந்தது. அதன் அடிப்படையில் (08.11.2022) இன்று சென்னை உலகத்தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்நாடு முதலமைச்சரின் நேர்முக உதவியாளர் சண்முகம் இவ்விருதுகள் வழங்கப்பட்டன.
திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பூ. இரவிக்குமார் இவ்விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு அரசின் தூயதமிழ்ப்பற்றாளர் விருது மற்றும் 20,000 ரூபாய் பரிசுத்தொகையையும் பெற்றேன். இவ்விழாவில் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் அருள் நடராஜன், அகரமுதலி இயல் இயக்கத்தின் இயக்குனர் விஜயராகவன், வி.ஜி.பி சந்தோஷ், கவிஞர் மற்றும் திரைப்படப் பாடல் ஆசிரியர் மதன் கார்த்தி பங்கேற்று விருதுகளை வழங்கி சிறப்புச் செய்தனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.co/nepIqeLanO
Comments