திருச்சிராப்பள்ளி மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து குடியிருப்புகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மாநகராட்சியின் அனைத்து சேவைகளையும் உடனுக்குடன் பெறுவதற்கும், புகார் வழங்குவதற்கும் தேவையான QR Code அடையாள அட்டைகள் மாநகராட்சியின் மூலம் அனைவருக்கும் விநியோகம் செய்யப்பட உள்ளது.
இப்பணியினை மேற்கொள்ள தேவையான மதிப்பீட்டு எண்கள் மற்றும் குடியிருப்பு விவரங்களை சேகரிக்க வரும் பணியாளர்களிடம் குடியிருப்புகளில் உள்ள பொது மக்கள் தேவையான விவரங்களை அளித்து அனைத்து பொது மக்களும் QR Code அடையாள அட்டைகள் பெறுவதற்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு திருச்சி மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments