கடந்த சில நாட்களாக மழை அவ்வப்பொழுது பெய்து வந்தாலும் இன்று மாலை திருச்சியில் கனமழை கொட்டியது. இதில் தென்னூர் ஹோட்டல் ஷான்ஸ் முதல் மேம்பாலம் வரை சுமார் 1 அடி உயரத்திற்கு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகளும், பொதுமக்கள் நடக்க முடியாமல் தவித்தனர்.
இப்பகுதியில் கடந்த ஆண்டு புதிதாக சாக்கடைகள் கட்டப்பட்ட பிறகு இது நாள் வரை குப்பைகள் அகற்றப்படாததால் உள்ளே தேங்கிய பிளாஸ்டிக் கழிவுகளால் சாக்கடை நீர் முழுவதும் சாலையின் நடுவே வந்தது. இதனால் மழை நீரும், சாக்கடை நீரும் சேர்ந்து தண்ணீர் தேங்கியதன் காரணமாக அப்பகுதியைக் கடக்க வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமப்பட்டனர். மேலும் இப்பகுதி நடைப்பாதைகள் முழுவதும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் தேங்கிய சாக்கடை நீரில் நடந்து சென்றனர்.
நடைபாதைகள் முழுதும் கடைகளும், வாகனம் பார்க்கிங் செய்யும் இடமாகவும், கடைப் பொருள்கள் வைத்து கொள்ளும் இடமாகவும் இருப்பதால் மக்கள் சாக்கடை நீரில் நடந்து செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. எனவே நடைபாதைகளின் ஆக்கிரமங்களை அகற்றியும் சாக்கடைகளை முழுவதுமாக தூர்வாரி மழைநீர் வடிகால் நேரடியாக இரட்டை வாய்க்கால் தெரு பகுதியில் செல்ல மாநகராட்சி உரிய முறையில் சரி செய்திட அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments