Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

அண்ணாமலைக்கு ஆதரவு தருவாரா அன்புள்ள ரஜினிகாந்த் !!

தான் உண்டு தன்னுடைய வேலை உண்டு எனத்திரை உலகில் அனைவரிடமும் அனுசரித்து தன்னுடைய கடுமையான முயற்சியால் ”சூப்பர் ஸ்டார் ” எனும் பட்டத்துக்கு நிரந்திரமாக காப்புரிமை பெற்று வைத்திருப்பவர் ரஜினி என சொல்லமாக அழைக்கபடும்  ரஜினிகாந்த். பணத்திற்காக விளம்பரப்படங்களில் நடித்தது இல்லை, ஆண்ட கட்சியோ ஆளும் யாரோடும் பகைமை பாராட்டியதில்லை, கோபம் இருக்கும் இடத்தில் குணம் இருக்கும் என்பதுபோல கோபம் மட்டுமே அடிக்கடி வரும் அதனையும் பெரிதாக வெளிக்காட்டிக்கொள்ளாமல் குணத்தால் வசீகரித்த கலைஞன்  அடக்கமக இருந்த காலம்.

ஆம், 1991-1996 ஜெயலலிதா ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த காலம், ஏக பந்தாக்கள் ஏகப்பட்ட ஊழல்கள்  வளர்ப்பு மகனின் ஆடம்பரத்திருமணம் மகாமஹ குளக்கரையில் நிகழ்ந்த நிகழ்வுகள் அவர்கள் வைத்ததுதான் சட்டம் முதல்வர் வெளியே கிளம்புகிறார் என்றால், கிட்டத்தட்ட அன்றையதினம் சென்னையே முடக்கப்படும் போக்குவரத்துக்களில் அப்படி ஒரு கெடுபிடி, ஒரு நாள் தற்செயலாக சிக்கிக்கொண்டது சூப்பர் ஸ்டாரின் வாகனம், கிட்டத்தட்ட அரை மணி நேரம், ஸ்டெல்லா மேரிஸ் அருகே உள்ள  போயஸ் கார்டன் போக வேண்டும் முதல்வர் போயஸ்கார்டனில் இருந்து வர வேண்டும் வீட்டிற்கு பத்து நிமிட நடைபயணத்தில் ரஜினி சென்றடைந்துவிட முடியும் ஆனால் அவருடைய காரோ அரை மணி நேரமாக நின்று கொண்டிருக்க பற்ற வைத்தார் சிகெரெட்டை பரட்டை, அப்பொழுது ஒரு பொறி கிளம்பியது டிரைவர் நீ வண்டிய எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்துடு என ஸ்டைலாக சிகரெட்டை பிடித்தபடி தெருவில் இறங்கி போயஸ் கார்டன் நோக்கி நடக்க ஆரம்பித்தார், ஸ்வாமி ஊர்வலம் போகும் பொழுது பக்தர்கள் பின்னால் படையெடுப்பது போல அப்படியொரு கூட்டம் சேர்ந்து கொண்டது.

காவல்துறையினர் கையை கசக்கிக்கொண்டு வேடிக்கை பார்த்தார்கள் போக்குவரத்து ஸ்தம்பித்தது அதுதான் ஜெவிற்கும் ரஜினிக்குமான முதல் மோதல் அதன்பின் ரஜினி வீட்டை நடந்தே சென்றடைந்த பின் ஜெயலலிதா வீட்டை விட்டு வெளியே வந்தார் அல்லோகல்லப்பட்டு அண்ணாசாலை வரை போக்குவரத்து ஸ்தம்பித்தது அன்றைய நாளேடுகளில் அதுதான் தலைப்புச்செய்தி,  சத்யா மூவிஸ் என்னும் பெயரில் திரைப்படமும் தயாரித்துக் கொண்டிருந்தார் ஆ.எம்.வீரப்பன் , அவருடைய திரைப்படமான பாட்ஷா அப்பொழுது தயாராகிக்கொண்டிருக்க, ஆட்சியாளர்களின் அராஜகங்கள் ஊழல்கள் வெளிவரத்தொடங்க ரஜினிகாந்த் வெகுண்டுழுந்தார் படம் முழுவதும் ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்து சொல்வது போல ஏக பஞ்ச் டயலாக்குகள் பட்டையை கிளப்பி இருப்பார் பாலகுமாரன்.  பாட்ஷா படத்தில் ரஜினியின் வசனங்களிலேயே இன்று வரை பிரபலமாக இருப்பது பாட்ஷா படத்தில் வரும் “நா ஒரு தடவ சொன்னா, நூறு தடவ சொன்னா மாறி” என்னும் வசனம் தான். ரஜினிக்கு இந்த படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. பாட்ஷா படத்தின் வெள்ளி விழாவில் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு பிரச்சனை குறித்து ரஜினிகாந்த் குறிப்பிட்ட கருத்துகளுக்கு மேடையில் இருந்த ஆர்.எம். வீரப்பன் மறுப்புத் தெரிவிக்கவில்லையென்பதால், அவரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்கினார் ஜெயலலிதா.

இதற்காக ஆர்.எம். வீரப்பனிடம் மன்னிப்புக்கேட்ட ரஜினிகாந்த், 1995 செப்டம்பர் மாத இறுதியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில் “அ.தி.மு.கவினரும் எம்.ஜி.ஆர். ரசிகர்களும் தொண்டர்களும் செல்வி ஜெயலலிதா தலைமையில் மறுபடியும் ஆட்சி அமைத்துக் கொடுத்தால் தமிழக மக்களை ஆண்டவனாலும் காப்பாற்ற முடியாது” என்று கூறியிருந்தார். ஆர்.எம்.வீயை அமைச்சரவையில் இருந்து அகற்றிய அந்த தருணத்தை கருணாநிதி தன்னுடைய ராஜதந்திரமாக பயன்படுத்திக்கொண்டார் அதுவரை அதிக அரசியல் பேசாத ரஜினிகாந்தின் போயஸ் இல்லம், அரசியல் பிரபலங்களின் ஆலோசனை கூடமாகிப்போனது துக்கள் சோ, ஆர்.எம்.வி மூப்பனார், தமிழருவி மணியன் ஆகியோர் ஒன்று கூடி அதிமுகவை வீட்டுக்கு அனுப்பிவிட்டு கலைஞரை அரியணை ஏற்ற முயற்சி மேற்கொண்டனர்.

அப்பொழுதுதான் கீ.வீரமணி ஜெயலலிதாவிற்கு சமூகநீதிகாத்த வீராங்கனை என்று பெயரிட்டு வாழ்த்தி பேசினார், ஆமை புகுந்த வீடும் அமீனா புகுந்த வீடும் உருப்படுமா என அப்பொழுதே வீரமணியை வைத்து செய்தனர் வேண்டாதவர்கள் ஆட்சியில் வந்து அகோபில மடமே உட்கார்ந்தாலும் வீரமணி அகோபில மட விஸ்வாகியாகிவிடுவார் வீரமணி என விமர்சனங்கள் எழுந்தது எதிர்தரப்பு இன்னும் சூடாகிப்போனது. ரஜினியின் படங்களிலேயே மெகா கலெக்சன் படம் என்றால் அது படையப்பா தான். இதில் ரஜினி படத்தின் பெரும்பாலான காட்சிகளில் “என் வழி தனி வழி” என்னும் வசனத்தை பேசியிருப்பார். அதன்பின் தொடர்ச்சியாக தனது படங்களில் பன்ச் டயலாக்குகள் அதிகம் வருவதை விரும்ப ஆரம்பிக்க வசனகர்தாக்களோ வாய்ப்புக்காக ஜெயலலிதாவை மனதில் கொண்டே எழுதி குவித்தார்கள் ஆனால் அவை அனைத்தும் சூப்ப்ர் டூப்பர் ஹிட் ஆனது வேறு கதை அத்தோடு ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என ஆர்ப்பரித்தனர் ரஜினியின் ரசிகர்கள்.

அதன்பின் 1996ல் காங்கிரஸில் இருந்து பிரிந்த தமிழ் மாநில காங்கிரஸ் திமுக, சிபிஐ, இந்திய தேசிய லீக், அனைத்திந்திய பார்வார்டு பிளாக் ஆகியன ஒன்றிணைந்து அதகளம் செய்தது அதிமுக அரியணையை இழந்தது 224 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த கட்சி 4 தொகுதியை பெறவே நாக்குத்தள்ளி போனது. அதன்பின்னர் அடக்கி வாசிக்க ஆரம்பித்தார் ஜெயலலிதா அதன்பின்னர் அரசியல் பேசுவதை ரஜினிகாந்த் நிறுத்த ஆரம்பித்தாலும் ”துக்கள் சோ ” ரஜினிக்கு தூபம் போட்டுக்கொண்டிருந்தார் இரண்டு திராவிட கட்சிகளும் வேண்டாம் மாற்றாக ஒன்றை யோசியுங்கள் என்றார்.

 
எதற்குமே ஆசைபடாத ரஜினிகாந்த் தன்னுடைய ரசிகர்களுக்காக ஆசைபட ஆரம்பித்து மீண்டும் அவர்களை அரசியல் கனவுகளிலேயே ஏன் போதையிலேயே வைத்திருந்தார் என்றே சொல்ல வேண்டும் அதற்கு சரியான பன்ச் டயலாக், ரஜினியின் அடுத்த வெற்றிப்படமான ‘முத்து’ வெளியானது. ‘நான் எப்ப வருவேன்; எப்படி வருவே?ன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்’ அனலாய் பறந்தது தலைவா நீங்கள் நடிக்க தேவையில்லை நடந்து வந்தாலே போதும் என ஆங்காங்கே சுவரொட்டிகள் மெகா சைஸ்க்கு பளபளத்தன.

இப்படி ரசிகர்களுக்கு அடிக்கடி அரசியல் ஆசை காண்பித்துவிட்டு ஜகா வாங்கும் ரஜினிகாந்த் திடீரென தனது அரசியல் முடிவை அறிவித்தார் ஆம் 2017ம் ஆண்டு ‘தனிக் கட்சி தொடங்கி, 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம்’ என ரசிகர்கள் மத்தியில் சூளுரைத்தார் ஆனால் கோவிட்டை இன்னும் விரட்ட முடியவில்லை அதனை காண்பித்து ரசிகர்களை விரட்டி இம்முறையும் ஏமாற்றத்தை பரிசாக தந்தார்… ஆனாலும் இன்று வரை அவரது ரசிகர்கள் ஏங்கித்தான் கிடக்கிறார்கள் தங்களுக்கும் தங்கள் தமிழ்நாட்டுக்கும் நல்லது நடக்காதா என அதற்கு சரியான தருணம் இதுதான் என நம்பும் அவரது ஆதரவாளர்கள் துவண்டு போய் கிடக்கும் அண்ணாமலையை ஆதரிக்க வேண்டும் என்கிறார்கள்,

அதற்கு அவர்கள் கூறும் காரணம் கருணாநிதி, ஜெயலலிதா எனும் இருவரும் இல்லாதா வெற்றிடத்தை நிரப்ப வேண்டும் என்பதும் அண்ணாமலையும்  இவரும் ஆன்மிகத்தின் மீது பற்று கொண்டவர்கள், ஊழலுக்கு எதிரானவர்கள் மோடி மீது தீர்க்கமான தீராக்காதல் கொண்டவர்கள் ஆகவே இம்முறை அவரை ஆதரிக்க வேண்டும் என்கிறார்கள். 

படையப்பா… காட்டுவாயா உன் படை பலத்தையப்பா !

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *