நாடு முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த கொரோனா இரண்டாவது அலையில் ஏராளமானோர் உயிரிழந்து உள்ளனர். குறிப்பாக ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி பொன்மலை ரயில்வே மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகள் உள்ளது.
இங்கு ரயில்வே பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் ஏராளமானோர் கொரோனா சிகிச்சை பெற்று வருகின்றனர். இதற்காக பொன்மலை ரயில்வே மருத்துவமனைக்கு ராம்கோ சிமெண்ட் நிறுவனம் 3 ஆக்சிஜன் செறிவூட்டிகளை இன்று வழங்கியது.
தலா 75 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள், தலா 5 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும். இந்த ஆக்சிஜன் செறிவூட்டிகள் ராம்கோ நிறுவனத்தின் சமூக பொறுப்பு திட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது. திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் அஜய்குமாரிடம் ராம்கோ நிறுவன நிர்வாகி ராம்ராஜி வழங்கினார்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/I7AbpT9vFZAKjl63kSeYJx
Comments