திருச்சி மாவட்டம் துறையூர், எட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் விஜயன் (60). கூலித் தொழிலாளியான இவர், கடந்த 2019ம் ஆண்டு 36 வயதுடைய மனவளர்ச்சிக்குன்றி ஒரு பெண்ணை பாலியல் வன்புணர்வு செய்தார். இதுகுறித்து முசிறி அனைத்து மகளிர் போலீஸார் (20.04.2019) அன்று வழக்குப்பதிவு செய்து விஜயனை கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விஜயனுக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கை விசாரித்த நீதிபதி ஸ்ரீவத்ஸன் அளித்த தீர்ப்பில், விஜயனுக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் கட்டத்தவறினால், 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து உத்தரவிட்டார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments