பொதுமக்களின் நலன் கருதி ஒரே நாளில் புகார் மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டு ஒரே நாளில் முடிவுக்கு கொண்டு வருவது பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இப்பணியை மேலும் சிறப்பாக செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தெரிவித்துள்ளார் .
திருச்சிராப்பள்ளி மாநகரில் உள்ள காவல் நிலையங்களில் பெறப்படும் புகார்கள், இணையவழியில் பெறப்படும் புகார்கள் ,வாட்ஸ் அப் மூலம் பெறப்படும் புகார்கள் அனைத்திற்க்கும் உடனடி தீர்வு காணும் வகையில் மனுதாரர்கள் மற்றும் எதிர்மனுதாரர் பொதுவான இடத்திற்கு வரவழைத்து மனுக்கள் மீதான குறைதீர்ப்பு முகாம் நடத்தினார்.திருச்சிராப்பள்ளி மாநகர காவல் ஆணையர் முனைவர் லோகநாதன் உத்தரவின் பேரில் 20 .02.2021இன்றைய தினம் திருச்சி மாநகர் அனைத்து சரகங்களிலும் மனுக்கள் மீதான குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட்டது.
அதன்படி 20.02.2021 ல் 4 இடங்களில் கன்டோன்மென்ட் காவல் நிலைய சரகத்தில் கண்டோன்மெண்ட் சீனிவாச மஹாலில் பொன்மலை சரகத்தில் பொன்மலைப்பட்டி அதர்வா மினி ஹாலிலும் ,கோட்டை சரகத்தில் சின்ன கடை வீதி ரவி மினி ஹாலிலும் மற்றும் ஸ்ரீரங்கம் சரகத்தில் திருவானைக்கோவில் ஆறுநாட்டு வெள்ளாளர் திருமண மண்டபத்திலும் மனுக்கள் மீதான குறைதீர்க்கும் முகாம் நடத்தப்பட்டது.
இதில் உதவி ஆணையர்கள் காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டு மனுதாரர்களையும்
எதிர்மனுதாரர்களையும் நேரடியாக வரவழைக்கப்பட்டு 168 மனுக்கள் மீது விசாரணை செய்யப்பட்டது.அதில் 139 மனுதாரர்கள் 146 எதிர் மனுதாரர்கள் ஆஜராகியிருந்தனர் இரு தரப்பையும் விசாரணை செய்து மேற்படி 168 மனுக்களில் 125 மனுக்கள் மீதான முடிவு எட்டப்பட்டு மனுக்கள் முடித்து வைக்கப்பட்டது
காவல்துறை பொதுமக்களுக்காக இதுபோன்ற சிறப்பு முகாம்கள் அமைக்கப்படுவதும் இது போன்ற நல்ல முயற்சிகளை மேற்கொள்வது மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் விதமாக இந்த நிகழ்வானது முன்னுதாரணமாக அமைந்துள்ளது.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/LQQVzK3j420HuvITMlwYIH
Comments