திருச்சி மாநகராட்சியின் ஸ்ரீரங்கத்தில் உள்ள 1வது வார்டு பில் கலெக்டராக பாலு என்பவர் பல வருடங்களாக பணிபுரிந்து வந்தார் அவரை இரண்டாவது வார்டுக்கு பில் கலெக்டராக (வரி தண்டலர்) மாநகராட்சி நிர்வாகம் அவருக்கு நெருக்கடி கொடுத்து மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது.
மேலும் அவருக்கு தொடர்ந்து மாநகராட்சி நிர்வாகம் நெருக்கடி கொடுத்ததாகவும் இதனால் மன உளைச்சலில் இருந்த அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு மாத்திரைகள் சாப்பிட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் இன்று மண்ணச்சநல்லூர் அருகே அவர் இரு சக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது மயங்கி சாலையில் விழுந்து விபத்தில் பலியானார். இன்னும் 15 நாட்களில் அவர் ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn
Comments