Wednesday, August 6, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

2 கோடி ரூபாய் மதிப்பிலான விநாயகர் மற்றும் மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலைகள் மீட்பு – 3 நபர் கைது

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியை சேர்ந்த பாலமுருகன் (36) த/பெ கல்யாணசுந்தரம் என்பவர் பழமையான மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலையை 2 கோடிக்கு விற்க முயற்சி செய்வதாக சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல் துறை கூடுதல் இயக்குநர் சைலேஸ் குமார் யாதவ் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் காவல் துறை தலைவர் சிலை திருட்டு தடுப்பு பிரிவு முனைவர் இரா.தினகரன் மற்றும் காவல் கண்காணிப்பாளர சிலை திருட்டு தடுப்பு பிரிவு முனைவர் இரா. சிவக்குமார் ஆகியோர் சிலை கடத்தல் கும்பலுக்கு சந்தேகம் ஏற்படாத வண்ணம் சிலையை மீட்க ஒரு செயல் திட்டம் வகுத்தனர்.

இதையடுத்து காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜா தலைமையில் ஆய்வாளர்கள் ரவீந்திரன், சத்தியபிரபா, உதவி ஆய்வாளர்கள் ராஜேஸ், மதன், ராமசாமி, தலைமை காவலர்கள் சக்திவேல் மற்றும் ரீகன் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டு இத்தனிப்படையினரை சிலை வாங்கும் நபர்களை போல புரோக்கர் பாலமுருகனை அணுகச் செய்தனர். அவனின் நம்பிக்கையை பெற தனிப்படையினருக்கு பத்து நாட்களுக்கு மேல் ஆனது இறுதியாக அவன் இச்சிலையினை தனிப்படையினருக்கு காட்ட ஒப்புக்கொண்டான். தனிப்படை அதிகாரிகள் சத்தியபிரியா மற்றும் ராஜேஸ் ஆகியோர் பாலமுருகனை காரியாபட்டியில் சந்தித்து பேசிய போது அந்த மாணிக்கவாசகர் சிலையின் மதிப்பாக இரண்டு கோடி முடிவு செய்யப்பட்டது. 

இத்தனிப்படையினர் அக்குற்றவாளியிடம் மேற்கொண்டு பேச்சுக் கொடுத்த போது இவனது நண்பன் சென்னையை சேர்ந்த பிரபாகரன் என்பவரிடம் மேலும் ஒரு விநாயகர் சிலை இருப்பது தெரிய வந்தது. எனவே அந்த சிலையையும் கைப்பற்றுவதற்காக மேற்கூறிய பாலமுருகனை சென்னைக்கு வந்து அந்த சிலையையும் வாங்கி தருமாறு கேட்டனர். முதலில் ஒப்புக்கொள்ள மறுத்த பாலமுருகன் கடும் முயற்சிகளுக்கு பின் சென்னை வர ஒப்புக்கொண்டார். அத்திட்டத்தின்படி இன்று காலை தனிப்படை உதவி ஆய்வாளர்கள் ராஜேஸ் மற்றும் ராமசாமி ஆகியோர் திருவள்ளுர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அருகே குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்தனர்.

அப்போது பாலமுருகனும் அவனது நண்பர்களான 1. பிரபாகரன் (40) த/பெ மனோகர் அம்பத்துார் சென்னை மற்றும் 2. மணிகண்டன் (34) த/பெ சின்னப்பாண்டி, காரியாபட்டி, விருதுநகர் ஆகியோரும் ஒரு பெட்டியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையோடு அவ்விடத்திற்கு வந்தனர். பின்னர் மேற்கூறிய மூன்று குற்றவாளிகளும் தனிப்படையினரும் ஒரு மறைவான இடத்தில் பேச்சுவார்த்தை நடத்திய போது அந்த விநாயகர் சிலைக்கு ரூபாய் 4 கோடி என மதிப்பு நிர்ணயம் செய்யப்பட்டது. அப்போது காவல் துணை கண்காணிப்பாளர் முத்துராஜா தனது தனிப்படை காவலர்களுடன் வந்து அம்மூன்று நபர்களையும் சுற்றி வளைத்து பிடித்து அவர்களிடமிருந்து மேற்கூறிய இரண்டு சிலைகளையும் மீட்டார். 

சிலைகளின் விபரம் பின்வருமாறு.

1. மாணிக்கவாசகர் ஐம்பொன் சிலை உயரம் 25 செமீ, அகலம் 8 செமீ, 6160) 1.5 860. 2. விநாயகர் ஐம்பொன் சிலை உயரம் 50 செமீ, அகலம் 26 செமீ, எடை 20 கிலோ.

இது சம்பந்தமாக மேலும் விசாரணை மேற்கொண்டதில் இவ்விரு சிலைகளும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த செய்யார் அருகே உள்ள ஏதேனும் ஒரு கோவிலில் இருந்து திருடப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. மேலும் இவ்விரு சிலைகளும் 18 ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என்பதும் இவற்றின் சர்வதேச சந்தை மதிப்பு ரூபாய் 2 கோடிக்கு மேல் இருக்கலாம் என்பதும் தெரிய வந்துள்ளது. இதுசம்பந்தமாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கு.எண்.15/2023 u/s 41 (1) (d),102 CrPC r/w 454(2), 457 (2), 380 (2), 411 IPC and 25(2) AAT என்ற சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சிலைகள் எந்த கோவிலில் இருந்து திருடப்பட்டது என்பது குறித்தும் இதில் வேறு யாரேனும் குற்றவாளிகள் சம்மந்தப்பட்டிருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

தனிப்படையினரின் இச்சிறப்பான பணியை காவல் துறை கூடுதல் இயக்குநர் சைலேஸ் குமார் யாதவ் வெகுவாக பாராட்டினார்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/DOwpV9QCMLgL8UqkbAZAxm

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *