திருச்சி மாவட்டம், லால்குடி அருகே எல். அபிஷேகபுரம் கிராமம் உள்ளது. லால்குடியிலிருந்து கூகூர் செல்லும் பிரதான சாலையில் உள்ள ஆலமரத்தோப்பு பகுதியில் உள்ள ஆறுமுகம் என்பவரது வயலில் எள் செடிகள் பயிரிட்டுள்ளனர்.
இந்த பயிர்களை, அதே பகுதியைச் சேர்ந்த ரவி என்பவர் இரவு, பகலாக காவல் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் ஆறுமுகம் வயலில் இன்று 30 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத பெண் கழுத்தை நெரித்தும், தலையில் பலத்த ரத்த காயங்களுடன் சடலமாக கிடந்துள்ளார்.
இது குறித்து அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் லால்குடி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலமாக கிடந்த பெண்ணின் உடலைக் கைப்பற்றி, உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சடலமாக கிடந்த பெண் மாநிறமாகவும், 5 அடி உயரமும், வெள்ளை சிகப்பு கலந்த சேலையும், சிகப்பு கலர் ஜாக்கெட் அணிந்திருந்தார். மேலும் ஒரு பேக்கில் 6 புடவைகளும், அதற்கான ஜாக்கெட், பாவடைகளும் இருந்தன. சம்பவம் தொடர்பாக ரவி என்பவரை பிடித்து லால்குடி போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய
https://chat.whatsapp.com/H58t6nW18bYCrFMtKLqSfu
Comments