திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் பகுதியில் உள்ளது அரசு பொது மருத்துவமனை. இம் மருத்துவமனையில் தினசரி ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளி நோயாளிகள் 80க்கும் மேற்பட்ட உள் நோயாளிகளும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இம்மருத்துவமனையில் உள்ள ஆபரேஷன் தியேட்டர் (அறுவை சிகிச்சை அரங்கு) மருத்துவமனையில் மேல் தளத்தில் உள்ளது. மேல்தளத்தில் உள் நோயாளிகளும் தங்கியுள்ளனர்.
இந்நிலையில் இன்று காலை அறுவை சிகிச்சை அரங்கிலிருந்து ஒரு துர்நாற்றம் வீசுவதாக மருத்துவமனையில் உள்நோயாளியாக சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் பணியில் இருந்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் துர்நாற்றம் வீசிய ஆப்ரேஷன் தியேட்டரில் சென்று பார்த்தபோது 50 வயது மதிக்கத்தக்க பெண் அழுகிய நிலையில் சடலமாக கிடந்ததால் இந்த துர்நாற்றம் ஏற்பட்டது தெரியவந்தது.
இதுகுறித்து மண்ணச்சநல்லூர் காவல்நிலையத்தில் அரசு மருத்துவமனை மருத்துவ அதிகாரி விஜயலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் மருத்துவமனை சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து மர்மமான முறையில் உயிரிழந்த அந்த பெண் எப்போது இந்த மருத்துவமனைக்கு வந்துள்ளார்.
அவருடன் யார்? யார்? வந்திருந்தனர் எப்படி அறுவை சிகிச்சை அரங்குக்குள் சென்றார் என்பது குறித்து சிசிடிவி ஹார்ட் டிஸ்கில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இந்த ஆய்வுக்கு பிறகு இறந்த பெண்மணி யார் எப்போது வந்தார் என்பது குறித்து தெரியவரும்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய..
https://t.co/nepIqeLanO
Comments