திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 75 வது சுதந்திர திருநாள் அமுதப்பெருவிழா ( Azadi ka Amrit Mohotasav ( AKAM ) தின நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக நாளை 01.10.2021 அன்று ஒரு நாள் மாநகராட்சி மைய அலுவலகத்தில் ( காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ) “வீட்டிலிருந்து உற்பத்தியாகும் குப்பை கழிவுகளிலிருந்து சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் மறுசுழற்சி செய்து பயன்படுத்தும் கைவினை பொருட்கள் கண்காட்சி திருச்சிராப்பள்ளி மாநகராட்சியில் நடத்தப்படவுள்ளது. அதுசமயம் பொதுமக்கள், மறுசுழற்சி உற்பத்தியாளர்கள், கைவினைப் பொருள் கலைஞர்கள், மகளிர் சுயஉதவிக்குழக்கள், தங்களது கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தி சிறந்த கைவினை பொருள் கலைஞருக்கு வழங்கப்படும்.
பரிசு மற்றும் சான்றிதழ்களை பெற்று தங்களது கைவினை பொருட்களுக்கு தகுந்த அங்கீகாரம் பெற்று பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் அரசி வழிகாட்டுதலின் படி சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட வேண்டும். மேலும் கொரோனா தொற்று காரணமாக கண்டிபாக முககவசம் அணிந்து வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/F2UyA1Y1JhlIdUVAiKp85h
டெலிகிராம் மூலமும் அறிய…
https://t.me/trichyvisionn
Comments