தமிழ்நாட்டில் 2021 – 22 ஆம் கல்வியாண்டிற்கான நேரடி வகுப்புகள் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கப்பட்டது. அதற்கு முன்பே ஆன்லைனில் வகுப்புகள் நடத்தப்பட்டு இருந்தாலும் நேரடி வகுப்பு தொடங்கப்பட்ட பின்னரே மாணவர்கள் தெளிவாக கல்வி கற்க ஏதுவான சூழல் ஏற்பட்டது. இந்த நிலையில் தற்போது 10, 11, 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் பல்வேறு பள்ளிகளில் மாணவர்களுக்கு அவசர அவசரமாக முடிக்காத பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். இவ்வாறு பாடங்கள் அவசர அவசரமாகவும், விரைவாகும் நடத்தப்படுவதால் மாணவர்கள் அதை மீண்டும் படித்து உணர்ந்து கொள்வதற்கு போதிய காலம் இல்லை நிலை ஏற்பட்டுள்ளது, மேலும் தற்போது திருப்புதல் தேர்வுகளும் தொடங்கியிருக்கிறது, செயல்முறை தேர்வும் தொடங்க இருக்கிறது.
இந்த நிலையில் அவசர அவசரமாக நடத்தப்பட்ட பாடங்களும், நடத்தாத பாடங்களும் தேர்வில் இடம்பெறும் ஆனால் மாணவர்கள் மதிப்பெண் பெறுவதில் சிரமம் ஏற்படும். மேலும் மாணவர்கள் மனஉளைச்சலுக்கு உள்ளாகக்கூடும். எனவே அமைச்சர் பொதுத்தேர்வு நடைபெற உள்ள 10, 11, 12ஆம் ஆகிய வகுப்புகளுக்கு இறுதியாக உள்ள இரண்டு பாடத்திட்டங்களை தேர்வில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் திருச்சி மாநகர், புறநகர் மாவட்டக் குழுவின் மனு திருச்சி முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
இதில் மாணவர் பெருமன்ற மாநில துணைச் செயலாளர் தினேஷ்குமார், மாவட்ட செயலாளர் இப்ராகிம், மாநிலக் குழு உறுப்பினர் தாஸ், மாவட்ட தலைவர் பாட்ஷா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய…. https://chat.whatsapp.com/HdeP1M74dJnKdGrH0YxsTa
#டெலிகிராம் மூலமும் அறிய.. https://t.co/nepIqeLanO
Comments