திருச்சி மாவட்டம் மணிகண்டம் ஒன்றியத்திற்குட்பட்ட வட்டார அளவில் தொடர்புடைய அனைத்து துறைகளின் அலுவலர்கள் மற்றும் வங்கியாளர்களுடன் ”வட்டார முதலீட்டுத் திட்டம்” பற்றிய திட்ட விளக்க கூட்டம் நேற்று மணிகண்டம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடைப்பெற்றது.
தமிழ்நாடு ஊரகப் புத்தாக்கத் திட்டம், மாவட்ட செயல் அலுவலர், ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட் திருச்சி வட்டார முதலீட்டுத் திட்டம் சார்ந்த விளக்கஉரை நிகழ்த்தினார். ஒன்றிய குழு தலைவர் கமலம் கருப்பையா முன்னிலை வகித்தார். திருச்சி வர்த்தக மைய தலைவர் கனகசபாபதி மற்றும் நபார்டு வங்கி உதவி பொது மேலாளர், கார்த்திக் மோகன் ஆகியோர்கள் சிறப்பு விருந்தினார்களாக கலந்து கொண்டனர்.
நாட்டு மாட்டு பால் விற்பனைக்காக அனைவரின் முன்னிலையில் அறிமுகப்படுத்தப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மணிகண்டம், வேளாண்மை மற்றும் தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர்கள் மணிகண்டம், ஆகியோர் துறை சார்ந்த திட்ட விளக்கங்களை வழங்கினர்கள்.
செயல் அலுவலர்கள், இளம் வல்லுநர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர், ஊராட்சி செயலர்கள், அனைத்து வங்கி கிளை மேலாளர்கள், கால்நடைத் துறை மருத்துவர்கள், ஊரக வாழ்வாதார இயக்க பணியாளர்கள், மற்றும் திட்ட செயலர்கள் கலந்து கொண்டனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments