திருச்சி மாவட்டம் துறையூர் தனியார் திருமண ஹாலில் நடைபெற்ற துறையூர் வட்டார நில தரகர் நல சங்க துவக்க விழாவிற்கு சிறப்பு விருந்தினராக துறையூர் கஸ்டமர்ஸ் மகாலிங்கம் கலந்துகொண்டு குத்துவிளக்கை ஏற்றி வைத்தார். இந்நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.
துறையூர் வட்டார நில தரகர்கள் நல சங்கத் தலைவராக மாயாண்டி என்கின்ற தங்கையனும், துணைத் தலைவராக மருத்தூரை சேர்ந்த ராஜேந்திரனும், செயலாளராக மணவை என்.பால்ராஜும், துணை செயலாளராக களத்தூர் சேகரும், பொருளாளராக வாலிஸ்புரம் தமிழரசனும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மேலும் எம்கே.சுபாஷ், பரமசிவம், பாண்டியன், மகா கிருஷ்ணன், நடராஜ் ஆகியோர் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இந்நிகழ்ச்சியில் ஆதியோகி நிறுவனர் டாக்டர் மணிகண்ணன் கௌரவ விருந்தினராக கலந்து உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் துறையூர் தாலுகாவை சேர்ந்த சுமார் 200க்கும் மேற்பட்ட நில தரகர்கள் கலந்து கொண்டனர். இறுதியில் கஸ்தூரி நன்றி உரை கூறினார்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/I1qYhcBomJGKR4Fi6km3h0
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments