Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

திருச்சிக்கு வந்த ரெம்டெசிவர் மருந்து 30 நிமிடத்தில் அனைத்தும் விற்று தீர்ந்தது!

திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள இயன்முறை சிகிச்சை கல்லூரியில் ரெம்டெசிவிர் மருந்து முதலில் 2 பேருக்கு வழங்கி விற்பனை  துவக்கம்.

தமிழக அரசு அறிவிப்பையடுத்து  திருச்சி மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி திருச்சி அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதா முன்னிலையில்  இயன் முறை சிகிச்சை கல்லூரியில் இருவருக்கு மட்டும் கொடுக்கப்பட்டது. 

தற்போது பொதுமக்களுக்கு ரெம்டெசிவர்  மருந்து திருச்சி பெரியமிளகு சாலையிலுள்ள இயன்முறை சிகிச்சை கல்லூரியில் வழங்கப்பட்டு வருகிறது.

மொத்தம் 350 Vials வந்துள்ளது.3vials என்றால் 115 பேருக்கு மேல்  6Vials என்றால்  58 பேர்களுக்கும் ரெம்டெசிவர் கொடுக்கலாம் என முதல்வர் வனிதா தெரிவித்தார். 

 
விலை நிலவரம்

inj. ரெம்டெசிவர்100mg 6 vials package Rs. 9408.

கீழ்கண்ட ஆவணங்கள் ரெம்டெசிவர் மருந்து வாங்கும் போது சமர்பிக்க வேண்டும் .
1.Dr.prescription original 
2.RTPCR report 
3.CT.scan report
4.patients Aadhaar card copy.
5.AttederAadhaar card copy.

திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/IBy8wyy7jdhEKVBGDROeon

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *