திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த துவரங்குறிச்சி ஆத்துப்பட்டி பகுதியில் துவரங்குறிச்சி முதல் மணப்பாறை செல்ல புதிய நான்கு வழி சாலை அமைய உள்ளது. இந்நிலையில் துவரங்குறிச்சி அருகே உள்ள ஆத்துப்பட்டி பகுதியில் சுமார் 40 குடியிருப்புகள் சாலையோரமாக வசித்து வருகின்றனர்.
இதனால் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு தாங்களாகவே ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொள்ளுமாறு நெடுஞ்சாலைத்துறை மூலம் அறிவிப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஆனால் குடியிருப்பு வாசிகள் வீடுகளை காலி செய்யாமல் இருந்ததால், இன்று நெடுஞ்சாலை துறையினர் மூன்று ஜேசிபி, இரண்டு ஹிட்டாச்சி, இயந்திரங்கள் கொண்டு ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றினர்.
மேலும் சில குடியிருப்பு வாசிகள் வீடுகளை அவர்களே காலி செய்தும் வருகின்றனர். முன்னதாக மின்வாரிய ஊழியர்கள் மூலம் அப்பகுதியில் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட மின்சாரங்களை துண்டித்து வருகின்றனர். மேலும் பாதுகாப்பு பணிக்காக துவரங்குறிச்சி காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம் தலைமையிலான 50க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய….
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments