திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திருவெறும்பூர் ரயில்வே மேம்பாலம் சர்வீஸ் சாலையில் கக்கன் காலனி பகுதி உள்ளது. இந்த பகுதியில் சுமார் 500 குடும்பங்களுக்கு மேல் உள்ளது இந்த நிலையில் அந்த பகுதியில் அரசு மதுபான கடை உள்ளது.
அந்த கடைக்கு மது அருந்த வரும் மதுபான பிரியர்கள் சாலையில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு கடைக்கு செல்லும் பொழுது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மதுபானங்களை வாங்கி வந்து சாலை ஓரத்தில் அமர்ந்து திறந்த வெளியில் மது அருந்துகின்றனர்.
இதனால் பொது மக்களுக்கும் அந்தப் பகுதியில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணவ மாணவிகளும் பொதுமக்களும் பெரும் பின்னலுக்கு உள்ளாகி வருகின்றனர். இதுமட்டுமின்றி வழிபாட்டுத்தலங்களும், மருத்துவமனையும் உள்ளது. அதனால் அதற்கு வரும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
எனவே அந்த அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கூறி விடுதலை சிறுத்தை கட்சியின் திருவெறும்பூர் தொகுதி செயலாளர் திலீபன் ரமேஷ் தலைமையில் திருவெறும்பூர் தாசில்தார் செயபிரகாசத்திடம் கோரிக்கை மனு அளித்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய… https://chat.whatsapp.com/EOjjjDwQWZa8HOTrrk6ttd
#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments