Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை உயிருடன் மீட்பு

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே மருங்காபுரி ஒன்றியம் எண்டப்புளி ஊராட்சி அழகாஸ்திரிப்பட்டியை சேர்ந்த அழகாஸ்திரி மகன் பழனிச்சாமி (70). இவருக்கு சொந்தமான 50 அடி ஆழ கிணற்றில்  2 வயது மதிக்கத்தக்க காட்டெருமை ஒன்று தவறி விழுந்துள்ளது.

இதனையடுத்து நிகழ்விடத்துக்கு வரவழைக்கப்பட்ட துவரங்குறிச்சி நிலைய அலுவலர் க.மாதவன் தலைமையிலான தீயணைப்புத்துறையினர்,  கோவை மற்றும் தேனியிலிருந்து வரவழைக்கபட்டனர்.

பின்னர் கால்நடை மருத்துவர்களின் உதவியுடன் மயக்க ஊசி செலுத்திய பின் கிணற்றில் இறங்கி, கிரைன் இயந்திரம் மூலம் காட்டெருமையை உயிருடன் கிணற்றிலிருந்து மீட்டெடுத்தனர். பின் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்ட காட்டெருமை அருகில் இருந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்றுவிடப்பட்டது.

திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ்அப் வழி அறிய!
https://chat.whatsapp.com/Ge0RgD7SIGiHznfNQgIidr

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *