Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ஏழை மாணவர்கள் எடுபிடி வேலை செய்தால் மட்டுமே ஆராய்ச்சி பட்டம் – எதிர்ப்பு தெரிவித்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவன்!!

திருச்சி பாரதிதாசன் பல்கலைகழகத்தில் வேதியியல் ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ளும் மாணவர் ஜீவா நேற்றுமுதல் தொடர்ந்து உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Advertisement

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறையில் ஆராய்ச்சி மாணவராக உள்ளவர் ஜீவா. இவர் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர்.GATE தேர்வில் அகில இந்திய அளவில் 76 ஆவது இடம் பிடித்தவர். NET தேர்விலும் தேர்ச்சி பெற்றவர்.பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் எம்எஸ்சி வேதியியல் படித்தவரை, பேராசிரியர் தியாகராஜன் ஆராய்ச்சி மாணவராக தன்னிடம் படிக்குமாறு தெரிவித்ததை அடுத்து ஜீவா ஆராய்ச்சி மாணவராக சேர்ந்துள்ளார். 

Advertisement

ஆனால் தனக்கான ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விடாமல் பேராசிரியரின் சுய வேலைகளை(தண்ணீர் பிடிப்பது, ஜெராக்ஸ் எடுக்க சொல்லுவது, வீட்டு வாட்ச்மேன் போன்ற வேலைகளை வாங்குவது) செய்ய கட்டாயப் படுத்துவதாகவும், மறுப்பு தெரிவித்ததால், ஏற்பட்ட முரண்பாட்டின் காரணமாக, உரிய காரணமின்றி தன்னை ஆராய்ச்சி படிப்பை விட்டு நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டத்தாலும், தனக்கு கிடைக்கவேண்டிய உதவித்தொகையை தராமல் நிலுவையில் வைத்ததாகவும், ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள உபகரணம், வேதியியல் பொருட்கள் தராமல் புறக்கணித்த தாகவும், இது குறித்து மாணவன் பல்கலைக்கழக நிர்வாகத்திடம் கடந்த ஆண்டு புகார் அளித்ததை தொடர்ந்து, சிண்டிகேட் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தியும், இதுவரை தீர்வு எட்டப்படவில்லை என கூறி, நேற்று இதுகுறித்து மீண்டும் முறையிட்டும் பதில் அளிக்கவில்லை என கூறுகிறார். 

இது குறித்து முதலமைச்சர், உயர்கல்வித் துறை அமைச்சர், பிரதமர் உள்ளிட்டோருக்கு புகார் அனுப்பியுள்ளதாக கூறுகிறார்.

இதனால் தன்னுடைய கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல்,தன்னைப் போன்ற ஆராய்ச்சி மாணவர்களின் இந்நிலையைக் கருத்தில் கொண்டு பல்கலைக்கழகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவர் ஜீவா பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை முன்பு அமர்ந்து உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இரவு முழுவதும் மாணவர் ஒருவர் இத்துறையில் போராட்டம் நடத்தி வந்த நிலையில் துறை நிர்வாகம் மற்றும் பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் அதனை கண்டுகொள்ளாமல் இருப்பதாக மாணவர் புகார் தெரிவித்துள்ளார்.

மேலும் ஆராய்ச்சி மாணவியை பாலியல் ரீதியாக பயன்படுத்தி வருவதாகவும், தன்னிடம் இது குறித்த ஆதாரம் உள்ளதாகவும் பகிரங்க புகார் தெரிவிக்கிறார்.

நாம் இதுகுறித்து துறை தலைவரை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, இன்று சிண்டிகேட் குழுவின் மூலம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் பதிவாளரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது,மாணவர் மற்றும் ஆசிரியர் கொடுத்த தனித்தனி புகாரின் அடிப்படையில் இது குறித்து யார் மீது தவறு என இன்று பல்கலைக்கழக குழு உரிய விசாரணை நடத்தி முடிவெடுக்கப்படும் என்றார். 

Advertisement

ஆனால் தன்னை இந்த புகாரை திரும்பப் பெற்றுக் கொள்ளுமாறும், 84 ஆயிரம் ரூபாய் பணம் கொடுப்பதாக கூறுவதாகவும், வேறொரு கல்லூரியில் பேராசிரியர் பணி பெற்று தருவதாகவும் கூறி பல்கலைக்கழக நிர்வாகம் சமரசம் செய்வதாகவும், புகார் மீது நடவடிக்கை எடுக்க மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறி மாணவர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆராய்ச்சி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்யும் பேராசிரியர்கள் மீதும், மாணவர்களை கொத்தடிமைகளாக நடத்தும் பேராசிரியர்கள் மீதும் குற்றநடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *