Site Logo mobile
Search Icon
Mobile Gif
Trending

ஸ்ரீரங்கத்தில் குடியிருப்பவர்கள் அது கோவில் நிலம் என்பதை ஏற்று கொண்டு அதற்கான வாடகையை செலுத்த வேண்டும் திருச்சியில் எச் ராஜா பேட்டி

ஸ்ரீரங்கத்தில் குடியிருப்பவர்கள் அது கோவில் நிலம் என்பதை ஏற்று கொண்டு, அதற்கான வாடகையை செலுத்த வேண்டும் – திருச்சியில் எச்.ராஜா பேட்டி

திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அடுத்த திருச்செந்தூரை கிராமத்தில் உள்ள சந்திரசேகரர் ஆலயத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஒருங்கிணைப்பு குழு அமைப்பாளர் எச். ராஜா சுவாமி தாரிசன் செய்த பின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்

பாராளுமன்றத்தில் வக்பு போர்டு சட்டத்தை திருத்துகின்ற மசோதா கொண்டுவரப்பட்ட போது 
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திருச்சி மாவட்டம் திருச்செந்தூரை கிராமத்தைப் பற்றி எடுத்துக்காட்டி தான் மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது.தற்போது அந்த மசோதா ஜாயின்ட் பார்லிமென்டரி கமிட்டிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

திருச்சியில் திருச்செந்துரை கிராமத்தின் நிலம்  பத்திரப்பதிவுசெய்ய முடியாது என துணை பதிவுத்துறை அலுவலகத்தில் அறிக்கை தந்து பின்னர் பேச்சு வார்த்தை நடத்தி தற்காலிகமாக பதிவு செய்வதாக அறிவித்தனர்.

 

கோபிசெட்டிபாளையம், ஈரோடு, கோயம்புத்தூர், வேலூர்  இந்த மாதிரி மாவட்டங்களில் அதிகமான இடங்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் வக்புக்கு சொந்தம் அப்படின்னு செக்ரட்டரி சொல்லி வருகிறார். 
தற்போது அந்த ஆயுதத்தை அவர்கள் கீழே போட்டு விட்டார்கள் கோவில் இருக்கலாம் ஆனால் சுற்றி இருக்கும் இடம் எங்களது என்று சொல்லி வருகின்றார்கள் தற்போது அந்த ஆயுதத்தை அவர்கள் கீழே போட்டு விட்டார்கள். கோவில் இருக்கலாம் ஆனால் சுற்றி இருக்கும் இடம் எங்களது என்று சொல்லி வருகின்றார்கள்.

வக்ப் வாரியத்திற்குள் முஸ்லிம் அல்லாத மற்ற மதத்தினரும் இருக்கலாம் என்று சட்டம் கொண்டு வந்தது, 2013ம் ஆண்டு காங்கிரஸ் அரசுதான் கொண்டு வந்தது. இந்த சட்டத்தை பல முஸ்லிம் தலைவர்கள் ஆதரிக்கின்றனர்.

வக்பு வாரிய சட்ட திருத்தம் நிறைவேற, திமுகவையோ, உதயநிதியையோ, அவரது மகனையோ கேட்க வேண்டிய அவசியம் இல்லை. 

தேசிய ஜனநாயக கூட்டணி ராஜ்ய சபாவிலும் பலமாக இருக்கிறது. நிச்சயம் வக்பு வாரிய சட்ட திருத்தம் நிறைவேறும்.திருச்சி ஸ்ரீரங்கத்தில் குடியிருப்பவர்களுக்கு அடிமனை பட்டா வழங்க வேண்டும் என்கிற அந்த மக்களின் கோரிக்கை குறித்த கேள்விக்கு…

ஸ்ரீரங்கத்தில் குடியிருப்பவர்கள் அது கோவில் நிலம் என்பதை ஏற்று கொண்டு, அதற்கான வாடகையை செலுத்த வேண்டும். 

அதே சமயம், ஏழை, நடுத்தர மக்கள் தங்களது பேரில் வைத்துள்ள நிலங்களை விற்கவோ, வாங்கவோ தடையில்லை. அதனை வஃக்பு போர்டு நிர்வாகம் தனக்கு சொந்தம் என உரிமைகோரி தடைவிதிக்க முடியாது. அதற்கான சட்டத்திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

திமுக கூட்டணியில் ஒரு கொந்தளிப்பான நிலை காணப்படுகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கூட அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஏனென்றால், அதன் கட்சித் தலைவர் திருமாவளவன், தமிழகத்தில் தலித் ஒருவர் முதல்வராக இல்லை என்பது குறித்து பேசியதும் பிரச்சினைக்கு காரணமாக இருக்கலாம்.

அவர்கள் கூட்டணிக்குள் ஏதோ ஒரு சலசலப்பு இருப்பது மட்டும் தெரிகிறது. திமுக கூட்டணி குழப்பத்தில் உள்ளது. 
பாஜகவுக்கு ஒருபோதும் பயனில்லை. பாஜக எப்போதும், பாஜகவை நம்பியே இருக்கிறது.
மத்திய அரசின் சாதனைகளை நம்பி இருக்கிறது .

சென்னை அசோக் நகரில் உள்ள பள்ளியில் ஊக்குவித்தல் பயிற்சி தொடர்பான கேள்விக்கு

திராவிடம் ஆட்சி 1967வந்தவுடன் முதல் செய்த வேலை நீதிபதி வகுப்புகளை எடுத்து விட்டார்கள். அறம் செய்ய விரும்பு என்கிறது ஆனால் ஆட்டிய போட விரும்பு என்று சொல்லுகிறவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அறம் செய்ய விரும்பு என குழந்தைக்கு சொல்லித் தரலாமாஆன்மீகம் பற்றியும் நீதி போதனை பற்றியும் பள்ளிக்கூடத்தில் சொல்லிக் கொடுக்க வேண்டும் ஈவேரா, கருணாநிதி பற்றி மட்டும் பாடம் எடுத்தால் மாணவர்கள் இதனை தாண்டி வனவாசம் குறித்து படிக்க மாட்டார்களா.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கல்வித்தரம் குறைந்துள்ளது என்று ஆளுநர் கூறிய கருத்து மிக சரியானது. அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேர்ந்து கொள்கிறேன் என்று முன்னாள் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா அறிவித்துவிட்டு, தற்போது பின் வாங்குகிறார்கள். இது எங்களது தவறல்ல.

அதிமுக உடன் கூட்டணி குறித்த கேள்விக்கு.

கடந்த 40 வருடங்களுக்கு மேலாக தான் பாஜக நிர்வாக குழுவில் பணியாற்றி வருகிறேன். நான் ஒருபோதும் கூட்டணி பற்றி பேசியதில்லை. இனிமேலும் பேச மாட்டேன் என தெரிவித்தார்

திருச்சி மாவட்ட தலைவர் ராஜசேகர் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம்

அறிய… 

https://chat.whatsapp.com/IpuTLRgmGqo0toZpY6O5jW

#டெலிகிராம் மூலமும் அறிய….

 https://t.me/trichyvision

https://www.threads.net/@trichy_vision

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *