திருவெறும்பூர் அருகே உள்ள பெல்பூரை சேர்ந்தவர் பரமேஸ்வரன் (66) இவர் மத்திய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான பெல் நிறுவனத்தில் மருத்துவ பிரிவில் துணை பொது மேலாளராக வேலை பார்த்து பணி ஓய்வு பெற்றவர்.
இந்நிலையில் பரமேஸ்வரன் நேற்று திருச்சிக்கு சென்று விட்டு வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்த பொழுது கோவையில் இருந்து பட்டுக்கோட்டை நோக்கி வந்த அரசு பேருந்து மோதியதில் பரமேஸ்வரன் நிலை தடுமாறி கீழே விழுந்தார்அப்போது பரமேஸ்வரன் தலையின் மீது பேருந்து ஏறி இறங்கியது இதில் பரமேஸ்வரன் மூலை சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார்.
இச்சம்பவம் பற்றி திருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திருவெறும்பூர் போலீசார் பரமேஸ்வரன் உடலை கைப்பற்றிய பிரதேச பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருவதோடு தப்பி உடைய அரசு பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.
திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/D2QYeuCTbUyCt93oWlOAgF
13 Jun, 2025
388
20 May, 2025







Comments