திருச்சி மாநகரில் இரவு மற்றும் அதிகாலையில் திருநங்கைகளின் உலா வருகின்றனர். குறிப்பாக மத்திய பேருந்து நிலையம், கல்லுக்குழி மேம்பாலம், குட்ஷெட் பாலம் பகுதிகளில் நள்ளிரவில் திருநங்கைகள் நின்று கொண்டு ஆண்களை பாலியலுக்கு அமைப்பதாக புகார் எழுந்தது. ஏற்கனவே கடந்த சில மாதங்களுக்கு முன்பு அரியமங்கலம் அம்மாகுளம் பகுதியில் திருநங்கைகள் இரு தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில் ஜங்ஷன் மற்றும் அரியமங்கலம் என இரு பிரிவுகளாக திருநங்கைகள் உள்ளனர். இதில் வாடிக்கையாளர்களை அழைப்பது தொடர்பாக இருதரப்பினருக்கும் அடிக்கடி மோதல் ஏற்படுவது வழக்கம். இந்த மோதல் முற்றிய நிலையில் நேற்று இரவு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் 80க்கும் மேற்பட்ட திருநங்கைகளுக்கு இடையே மோதல் நடைபெற்றது. ஒருசிலருக்கு காயம் ஏற்பட்டது.
இதுப்பற்றி தகவலறிந்த கண்டோன்மென்ட் போலீசார் மோதலில் ஈடுபட்ட திருநங்கைகளை கலந்து போக செய்தனர். இதனால் மத்திய பேருந்து நிலையத்தில் பதட்டமான சூழல் நிலவியது. பொது இடங்களில் திருநங்கைகள் அத்துமீறலால் பொதுமக்கள் மற்றும் பேருந்து பயணிகள் அச்சத்துடன் உள்ளனர். இந்த மோதல் சம்பவம் குறித்து கண்டோன்மெண்ட் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/C7dWGn2D61ELFrwqksYgdS
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments