திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பர்மா காலனி மாரியம்மன் கோவில் தெருவில் சாக்கடை கழிவுகள் தேங்கி கிடக்கின்றது. அதனால் தேங்கிய சாக்கடை கழிவு நீரில் கொசு, புழுக்கள் உற்பத்தியாகியும் துர்நாற்றம் வீசுவதால் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அப்பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்கு அடிக்கடி நோய் தொற்று ஏற்படுகின்றது. மழைக்காலத்திற்கு முன்பே இதனை சரி செய்ய மாநகராட்சி அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLG
Comments