திருச்சி மாநகராட்சியில் கொரோனா பாதிப்பை தொடர்ந்து தற்போது டெங்கு காய்ச்சல் பரவுவதால் பொதுமக்களிடையே அச்சம் அதிகரித்துள்ளது. திருச்சி ஸ்ரீரங்கம் தொகுதிக்குட்பட்ட திருவானைக்காவல் பகுதியில் நான்கு பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மூன்று சென்டிமீட்டர் முதல் 12cm வரை மாநகர் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் ஆங்காங்கே உள்ள பகுதிகள் மழை நீர் தேங்கி இருக்கும் வீடுகளில் பராமரிப்பற்ற கிடைக்கும் பொருள்களிலிருந்து கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து டெங்கு காய்ச்சல் உருவாக காரணமாகின்றன. கடந்த ஆண்டுகளில் மாநகரில் யாருக்கேனும் டெங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டால், பாதிக்கப்பட்டவர்களின் வீடு மட்டுமின்றி, அருகிலுள்ள வீடுகளையும் மாநகராட்சி நகர் நலப் பிரிவு அலுவலர்கள் ஆய்வு நடத்தி, பிறருக்கு டெங்கு பரவாத வகையில் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்.
மாநகராட்சி இதுவரை எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்… வீடுகள், கல்வி நிலையங்கள், நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், திரையரங்குகள் உட்பட மாநகர் முழுவதும் ஆய்வு நடத்தி, டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களை அப்புறப்படுத்தாதவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்பட்டது. ஆனால், நிகழாண்டில் டெங்கு காய்ச்சலால் பாதிப்பு நேரிட்ட பகுதிகளை மாநகராட்சி நகர் நலப் பிரிவு அலுவலர்கள் இதுவரை ஆய்வு செய்யவில்லை.
அதேபோல, டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களை அப்பு றப் படுத்துவது குறித்து பொது மக்களிடத்தில் இதுவரை விழிப் புணர்வு ஏற்படுத்தவும் நடவ டிக்கை எடுக்கவில்லை. இப்பணியில் ஈடுபடுத்த டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்களும் நியமிக்கப்படவில்லை என்றனர். இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறும்போது, ‘‘மாநகரில் டெங்கு கொசு உற்பத்தி ஆதாரங்களைக் கண்டறிந்து அழிக்கும் பணி உடனடியாக தொடங்கப்படும். இதற்காக தேவையான எண்ணிக்கையில் டெங்கு கொசு ஒழிப்புப் பணியாளர்கள் நியமிக்கப்படுவர்’’.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….
https://chat.whatsapp.com/Efyz91DMUiEK0NHbCDuGqJ
டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvisionn
Comments