திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கல்பாளையத்தான் பட்டியில் இருந்து புதுப்பட்டி, ராயம்பட்டி, மலையடிப்பட்டி வரை செல்லும் தார் சாலை கடந்த எட்டு வருடம் கடந்துவிட்ட நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் புதிய தார் சாலை அமைத்து தர பலமுறை கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதிய சாலை அமைப்பதற்கு ஒப்புதல் கிடைத்தும் சாலை அமைத்து தரவில்லை என்று கூறி அந்தப் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை மணப்பாறை இருந்து துவரங்குறிச்சி செல்லும் சாலையில் கல்பாளையத்தான்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் பற்றி தகவல் அறிந்த மணப்பாறை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்ட அந்த பகுதி பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில் தொடர்ந்து கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து மணப்பாறை திமுக ஒன்றிய செயலாளர் ராமசாமி பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி நாடாளுமன்ற தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் அதற்குத் தக்கவாறு உடனடியாக இந்த சாலை 4 கோடியே 10 லட்சத்திற்கு ஒப்புதல் கிடைத்துள்ளதாகவும், விரைவில் புதிய தார் சாலை அமைத்து தருவதாக கூறினார்.
அதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தினால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments