Wednesday, August 13, 2025 |
Site Logo mobile
Search Icon
Mobile Gif
Events

ஆக்கிரமிப்பை அகற்ற கோரி சாலை மறியல்

திருச்சி மாநகராட்சி 40-வது வார்டுக்கு உட்பட்ட ஐஏஎஸ் நகர் பகுதியில் சாலையை ஆக்கிரமித்து உள்ள  தனிநபர், தனி நபருக்கு ஆதரவாக மாநகராட்சி ஊழியர்கள் செயல்படுவதாக கூறி ஐஏஎஸ் நகர் நலச் சங்கத்தினர் திருச்சி – தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி மாநகராட்சி 40வது வார்டுக்கு உட்பட்டது ஐஏஎஸ் நகர் பகுதி இந்த பகுதியின் முதன்மை சாலை ஐஏஎஸ் நகரில் இருந்து திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலை இணைக்கும் வகையில் உள்ள சாலை ஆகும் இது 30 அடி அகலம் கொண்டது என்றும் இந்த சாலையை சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில்உள்ள 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும் இந்த பகுதியில் திருவெறும்பூர் பேரூராட்சியாக இருந்தபோதும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட போதும் தார் சாலை போடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதியில் உள்ள தனி நபர் ஒருவர் சாலை 20 அடி தான் என்று கூறி தனக்கு 10 அடி சொந்தம் என சாலையினை ஆக்கிரமித்து கல்லை நட்டு உள்ளார். இதனால் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்,

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சாலையை ஆக்கிரமித்து நடப்பட்ட கல்லை அகற்றி அக்கிரமித்த பொது இடத்தை மீட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என கூறி திருச்சி மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர் திருவெறும்பூர் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளிடம் கடந்த மாதம் 20ம் தேதி ஐஏஎஸ் நகர் நல சங்கத்தினர்  மனு கொடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் இன்று காலை மாநகராட்சி ஊழியர்கள் அந்த பகுதி சாலையை அளந்து ரோடு போடுவதற்காக ஜேசிபி இயந்திரத்துடன் வந்துள்ளனர். அப்படி வந்தவர்கள் ஆக்கிரமித்து உள்ளவரிடம் வேலியை அகற்றும்படி கூறியதாகவும் ஆனால் சிறிது நேரத்தில் நகர நலச் சங்கத்தினரிடம் நீங்கள் அனைத்து ஆவணங்களையும் முறையாக  கொடுத்தால் மட்டுமே சாலையை அளந்து நடவடிக்கை எடுக்க முடியும் இல்லை என்றால் அளக்க முடியாது என கூறியதாக கூறப்படுகிறது.

இதனால் ஐஏஎஸ் நகர் நலச் சங்கத்தினர் மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில்  ஆத்திரமடைந்த ஐஏஎஸ் நகர் நல சங்கத்தினர்

 திருச்சியில் தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இச்சம்பவம் பற்றிதிருவெறும்பூர் போலீசாருக்கு தகவல் கிடைத்ததும் திருவெறும்பூர் போலீசார் சம்பவ இடத்திற்குவிரைந்து வந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட நகர் நலச் சங்கத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.

 இதனால் திருச்சி தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் 10 நிமிடத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…. https://chat.whatsapp.com/CVEI9HGZeZI6ualvRGNLGP

#டெலிகிராம் மூலமும் அறிய…. https://t.me/trichyvisionn

slide image

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *