திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பச்சபெருமாள்பட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் உள்ள வகுப்பறை கட்டிடங்கள் மிகவும் பழமை அடைந்து சிதிலமடைந்து உள்ளதாகவும், போதுமான கழிவறை வசதிகள் இல்லை எனவும்,
குடிநீர் வசதிகள் இல்லை எனவும், மழை பெய்தால் வகுப்பறையில் மழை நீர் வடிகிறது என்று பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் பள்ளியில் அடிப்படை வசதிகளை செய்து, பழுதடைந்துள்ள வகுப்பறைகளை சீரமைத்து தரக் கோரி பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது பெற்றோருடன் இன்று திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
துறையூரில் இருந்து புளியஞ்சோலை மற்றும் நாமக்கல் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரமாக சாலை மறியல் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பள்ளி மாணவ மாணவிகளுடன் அவர்களது பெற்றோர்களும் சேர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பு ஏற்பட்டது.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments