திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை குழாய் பதிக்கும் பணி நடைபெற்று வருகிறது .இதே போல் குடிநீர் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுவது அனைவரும் அறிந்ததே. இதனால் மாநகராட்சியின் சாலைகள் தெருக்கள் என அனைத்தும் குண்டும் குழியுமாக காட்சியளிக்கிறது. மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிக்கான திட்டம் என்றாலும் மக்கள் படும் துன்பம் அதுக்கு எல்லையே இல்லாமல் போய்விட்டது.குழி தோண்டி குழாயில் வைத்து விட்டு அந்த குழிகளை சரிவர மூடாமல் அப்படியே விட்டு விடுவதும் அந்நேரத்தில் மழை பெய்தால் பொதுமக்களை சாலையைக் கடக்கும் பொழுது சாகசம் புரிய வேண்டிய நிலையில் உள்ளது.
குழந்தைகள் முதியவர்கள் இரவு நேரங்களில் சாலையில் நடந்து செல்ல முடியாது நிலையில் சாலைகள் உள்ளது.அவசர தேவைக்கு செல்வோர் சாலைகளில் விழுவதும் தொடர்கதையாகி வருகிறது. கடந்த ஜூன் மாதம் திருச்சி தில்லைநகர் இரண்டாவது கிராஸ் கிழக்குப் பகுதி குறுக்கு தெருவில் பணிகள் துவங்கப்பட்டு இதுவரை அச்சாலையில் புதிய சாலை விட பராமரிப்பு பணிகள் கூட நடக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
திருச்சி மாநகராட்சி 56வது வார்டில் இருக்கும் அப்பகுதி உள்ள பொதுமக்கள் மிக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு செல்வதில் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். சாலையில் இருசக்கர வாகனங்களை ஓட்ட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளனர். உடனடியாக அச்சாலையில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு இருசக்கர வாகனங்களில் செல்பவர்களுக்கு சீர் செய்து தருமாறு கோரிக்கை அப்பகுதி மக்கள் விடுத்துள்ளனர். மாநகராட்சி நிர்வாகம் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
#திருச்சி_விஷன் செய்திகளை வாட்ஸ் அப் வழி அறிய….. https://chat.whatsapp.com/DV3MG0TGN9x0CYy54GyO6a
Comments