35வது சாலை பாதுகாப்பு வார விழா திருச்சி – கரூர் நெடுஞ்சாலை சாலை திருப்பராய்த்துறை பேருந்து நிறுத்தம் பகுதியில் சாலை பயனீட்டாளர் நல அறக்கட்டளை மற்றும் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திருச்சி திட்ட இயக்கம் திருப்பராய்துறை சுங்கச்சாவடி நிர்வாகம் சார்பிலும் நடைபெற்றது.
சாலை விழிப்புணர்வு நிகழ்விற்க்கு முன்னாள் விமானபடை அதிகாரி தங்கராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட சாலை பாதுகாப்பு குழு உறுப்பினர் பெ.அய்யாரப்பன், பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விழிப்புணர்வு பிரசுரகங்களை வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வில் நூறுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு பிரசுரத்தை சாலை பயனீட்டாளர் அறக்கட்டளை அறங்கவலர் ராஜசேகர் மற்றும் சாலை பயனீட்டாளர் நலக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் கலைமகள் கரும்பாச்சலம், பெருகமணி லோகு மற்றும் சமூக ஆர்வலர் கார்த்திக்கேயன் ஆகியோர் வழங்கினர்.
இதனை தொடர்ந்து திருப்பராய்த்துறை சுங்கச்சாவடி நிர்வாக அலுவலர்கள் சார்பாக பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு சாலை பிரசுரம் வழங்கி சாலை பாதுகாப்பு குறித்த எடுத்துரைத்தனர்.
#திருச்சி விஷன் செய்திகளை வாட்ஸ் அப் மூலம் அறிய…
https://chat.whatsapp.com/JErJ2bWDTM5D4mAdBc3nOO
#டெலிகிராம் மூலமும் அறிய….
https://t.me/trichyvision
https://www.threads.net/@trichy_vision
Comments